• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கஜா புயலில் பலியானவர்களுக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு கோரிய வழக்கு: தமிழக அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

கஜா புயலில் பலியானவர்களுக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு கோரிய வழக்கு: தமிழக அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

உயர்நீதிமன்ற மதுரை கிளை

உயர்நீதிமன்ற மதுரை கிளை

Cyclone Gaja | கஜா புயலால் சேதமான கடலோர மாவட்டங்களுக்கு நிவாணமாக அளிப்பது குறித்து தொடரப்பட வழக்கில், தமிழக அரசுக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    கஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 30 லட்சமும் அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று தொடங்கப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அளித்துள்ளது.

    கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் தமிழகத்தில் டெல்டா மாவட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். புயலால் உருகுலைந்த மக்களுக்கு உரிய நிவாரண நிதியாக, “உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 30 லட்சமும் அரசு வேலையும் வழங்க வேண்டும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். கஜா புயலால் வேரோடு முறிந்த தென்னை மரம் ஒன்றிற்கு ரூ.50 ,000 வழங்க வேண்டும். சேதமடைந்த படகுக்கு ரூ.10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்” என்று கோரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கறிஞர் ஸ்டாலின் பொது நல வழக்காக மனு தாக்கல் செய்திருந்தார்.

    அந்த வழக்கு இன்று நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதிகள் தமிழக அரசுக்கு இந்த வழக்கு விசாரணை குறித்து நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். அதன்பின் வழக்கு விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தவிட்டனர்.

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: