• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கஜா புயல்: 100 டன் அரிசியை அதிமுக சார்பில் அனுப்பி வைத்த முதல்வர்

கஜா புயல்: 100 டன் அரிசியை அதிமுக சார்பில் அனுப்பி வைத்த முதல்வர்

100 டன் அரிசியை  அனுப்பி வைக்கும் முதல்வர்

100 டன் அரிசியை அனுப்பி வைக்கும் முதல்வர்

புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரணமாக 5 லாரிகள் மூலம் 100 டன் அரிசி அதிமுக சார்பில் அனுப்பப்பட்டது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அதிமுக தென் சென்னை வடக்கு மாவட்டம் சார்பில் 100 டன் அரிசியை நிவாரணமாக முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமி அனுப்பி வைத்தார்.

    அதிமுக சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவுறுத்திருந்தார். இதன்படி, தென் சென்னை வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் நிவாரணப் பொருட்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில்  கொடியசைத்து அனுப்பிவைத்தார்.

    அதிமுக சார்பில் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு 100டன் அரிசியை முதல்வர் அனுப்பி வைத்தார்.


    இதன்படி, கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரணமாக  5 லாரிகள் மூலம் 100 டன் அரிசி அனுப்பப்பட்டது. முன்னதாக, வடசென்னை மாவட்டம், மத்திய சென்னை, தென் சென்னை, தெற்கு மாவட்டங்கள் சார்பிலும் தேவையான நிவாரண பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Also see... 2.0 படம் ரிலீஸ்: ரசிகர்கள் கொண்டாட்டம் - புகைப்படத் தொகுப்பு

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: