Cyclone Fani | “புயலால் வறட்சி தீரும்... ஆனால்” - தமிழ்நாடு வெதர்மேன் கூறுவது என்ன?

Cyclone Fani | வானிலை நிலவரங்களை கவனித்து வரும் தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பதிவில், வர இருக்கும் புயல் வறட்சியை தீர்த்து வைக்க வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார்.

Cyclone Fani | “புயலால் வறட்சி தீரும்... ஆனால்” - தமிழ்நாடு வெதர்மேன் கூறுவது என்ன?
சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும்,அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலையாக 29 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.
  • News18
  • Last Updated: April 25, 2019, 2:49 PM IST
  • Share this:
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 48 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தென் தமிழகத்தில் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல இடங்களில் கோடை மழை பரவலாக பெய்து வரும் நிலையில், இந்திய பெருங்கடல் - வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் சில தினங்களுக்கு முன்னர் கூறியிருந்தது.

மத்திய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று காலை வெளியிட்டுள்ள முன்னறிவிப்பு செய்தியில் தெரிவித்திருந்தது.


படிக்க... சித்திரையில் வரும் புயல் ஆபத்தானது - பாரம்பரிய கணிப்பு மூலம் மீனவர்கள் அச்சம்

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த 36 மணி நேரத்தில் வலுப்பெற்று மத்திய இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய தெற்கு வங்க கடல் பகுதி நோக்கி நகரும்.

பின்னர் மேலும் வலுப்பெற்று புயல் சின்னமாக மாறி தமிழக மற்றும் இலங்கை கடற்கரையை நோக்கி நகரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக வரும் 28,29 தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தென் தமிழகத்தில் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வானிலை நிலவரங்களை கவனித்து வரும் தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பதிவில், வர இருக்கும் புயல் வறட்சியை தீர்த்து வைக்க வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார்.

“தற்போது வர இருக்கும் புயல் மிகவும் தீவிரமடைந்து எந்த பகுதிக்கு செல்கிறதோ அங்கு ஏராளமான மழையை கொடுக்கும். தமிழகத்தில் கரையை கடந்தால் வறட்சி போய், பின்னர் வெள்ளப் பெருக்கு ஏற்படும்.

எனினும், இந்த புயல் தமிழகத்துக்கானதா என கணிக்க இன்னும் ஒரு நாள் கழித்து தெரியவரும். 60 சதவீதம் இந்த புயல் தமிழகத்துக்கு என்றே தெரிகிறது.

ஒரு வேளை சென்னை அருகே இந்த புயல் கரையை கடந்தால், இது அனைத்து தண்ணீர் பிரச்சினைகளையும் தீர்த்துவிடும். ஏரிகள் நிரம்பிவிடும்.

ஆனால்,  சோகம் தரும் வகையில் புயல் மிகவும் ஆக்ரோஷமானது என்பதால் தண்ணீர் தேவைக்காக நாம் சில மரங்களை இழக்க வேண்டியிருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

First published: April 25, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading