புரெவி புயல் நகர்ந்து வரும் வேகம் குறைந்தும் வலுவடைந்தும் வருகிறது - வானிலை மையம்
புரெவி புயல் நகர்ந்து வரும் வேகம் குறைந்தும் வலுவடைந்தும் வருகிறது - வானிலை மையம்
புரெவி புயல்
நாளை மதியம் பாம்பனை நெருங்கி, பாம்பன், கன்னியாகுமரி இடையே நாளை இரவு அல்லது நாளை மறுதினம் அதிகாலை இரண்டாவது முறையாக கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் இருந்து இலங்கையை நோக்கி நகர்ந்து வரும் புரெவி புயலின் வேகம் 15 கிலோமீட்டராக குறைந்து வலுவடைந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள புரெவி புயல், மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் வேகம் மணிக்கு 25 கிலோமீட்டராக மதிய நேரத்தில் அதிகரித்த நிலையில், தற்போது அது குறைந்து 15 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது இலங்கையின் திரிகோணமலையிலிருந்து 110 கிலோமீட்டர் தொலைவிலும், பாம்பனிலிருந்து 330 கிலோமீட்டர் தொலைவிலும் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது இலங்கையின் திரிகோணமலை அருகே இன்று இரவு கரையைக் கடந்து, பின்னர் மீண்டும் கடல் பகுதிக்கு செல்கிறது. இதனைத் தொடர்ந்து, நாளை மதியம் பாம்பனை நெருங்கி, பாம்பன், கன்னியாகுமரி இடையே நாளை இரவு அல்லது நாளை மறுதினம் அதிகாலை இரண்டாவது முறையாக கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் காரணமாக, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். மேலும் மீனவர்களை பொறுத்தவரை அடுத்த 3 நாட்களுக்கு தென்கிழக்கு வங்கக் கடல், குமரி கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vijay R
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.