முகப்பு /செய்தி /தமிழ்நாடு / Cyclone Burevi | வங்கக்கடலில் உருவானது புரேவி புயல்.. முழு விவரம்..

Cyclone Burevi | வங்கக்கடலில் உருவானது புரேவி புயல்.. முழு விவரம்..

கோப்பு படம்

கோப்பு படம்

Tamil Nadu Weather | இலங்கையைத் தொடர்ந்து கன்னியாகுமரி - பாம்பன் இடையே 4-ம் தேதி அதிகாலை கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :

தென்மேற்கு - தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவு இலங்கையின் திரிகோணமலை அருகே கரையை கடந்து, பின் டிசம்பர் 4-ஆம் தேதி அதிகாலை கன்னியாகுமரி கடற்கரை பகுதியை நெருங்கும். அதனை தொடர்ந்து கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் மிக கனமழை முதல் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் டிசம்பர் நான்காம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

புயல் எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி மீனவர்கள் 2வது நாளாக கடலுக்குச் செல்லவில்லை. இதேபோல், கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளும் கரைக்கு திரும்பின. தேங்காய்ப்பட்டணம், குளச்சல் துறைமுகங்களில் இருந்து ஆழ்கடலுக்குச் சென்றவர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என சக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே, புரெவி புயல் மீட்பு நடவடிக்கைக்காக தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 20 பேர் கொண்ட 2 குழு, கன்னியாகுமரி சென்றடைந்தது.

மேலும் படிக்க...விவசாயிகளின் ஒவ்வொரு கோரிக்கையையும் பரிசீலிக்க அரசு தயார்: அமித் ஷா

திருநெல்வேலியில் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக, தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 60 பேர் கொண்ட 3 குழுவினர் அரக்கோணத்தில் இருந்து வந்துள்ளனர். மேலும், பாதிப்புக்கு உள்ளாகும் மக்களை தங்க வைப்பதற்கான முகாம்களும் தயார் செய்யப்பட்டுள்ளன.

ராமேஸ்வரத்தில் நிவாரண மையங்கள் மற்றும் மழை நீர் தேங்கும் பகுதிகளை மாவட்ட ஆட்சியர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார். இதனிடையே, படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைப்பதற்காக, பாம்பன் ரயில் தூக்கு பாலம் இரண்டு மணி நேரம் திறக்கப்பட்டது. இதையடுத்து, 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், குந்துக்கால் மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து பாம்பன், நாகை, கடலூர், தூத்துக்குடி, எண்ணூர் துறைமுகங்களிலும் 3ஆம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ். மற்றும் மூத்த அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்த முதலமைச்சர், புயலின் நிலையை உணர்ந்து அதிகாரிகள் செயல்பட உத்தரவிட்டார்.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: Burevi, Cyclone burevi, Indian meteorological department, Tamil Nadu Weather