புரெவி புயல் இன்று நள்ளிரவு பாம்பன் அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் கன்னியாகுமரி, தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு நாளை (நவம்பர் 04) அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் அடுத்த வருடம் 2021 ஜனவரி மாதத்தில் ஒரு சனிக்கிழமை வேலை நாள் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வங்க கடலில் மையம் கொண்டிருந்த புரெவி புயல் இன்று மன்னார் வளைகுடா பகுதியில் பாம்பனுக்கு அருகில் நிலை கொண்டுள்ளது. இப்புயல், 04.12.2020 அன்று அதிாகலை பாம்பன் - கன்னியாகுமரிக்கு இடையே, தென்தமிழக கடற்கரையை கடக்க கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அவ்வாறு புயல் கரையை கடக்கும் போது பெரும் மழைக்கும் புயுல் காற்றுக்கும் வாய்ப்புகள் உள்ளது என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு நாளை (04.12.2020) அரசு பொது விடுமுறை அளிக்கப்படுகிறது. இதற்கு ஈடாக 2021 ஜனவரி மாதம் ஒரு சனிக்கிழமை அரசு அலுவலங்கள் செயல்படும்.
மேற்கூறிய மாவட்டங்களில் அத்தியாவசிய பணிகள் தவிர வேறு பணிகளுக்கு பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்கவும்” என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
Published by:Vijay R
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.