Home » News » Tamil-nadu » CYCLONE BUREVI EXPECTED TO CROSS THE BORDER TWICE METEOROLOGICAL DEPARTMENT VAI

Cyclone Burevi | இருமுறை கரையை கடக்க உள்ள புரேவி புயல்... பலத்த காற்றுடன் கூடிய மழையால் தென் மாவட்டங்களில் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட வாய்ப்பு

Cyclone Burevi | புரேவி புயல் இரண்டு முறை கரையை கடக்கும் என கணித்துள்ள வானிலை ஆய்வு மையம், கரையை கடக்கும் போது 70 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும் எச்சரித்துள்ளது.

Cyclone Burevi | இருமுறை கரையை கடக்க உள்ள புரேவி புயல்... பலத்த காற்றுடன் கூடிய மழையால் தென் மாவட்டங்களில் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட வாய்ப்பு
கோப்பு படம்
  • Share this:
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள புரேவி புயல் அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றிரவு இலங்கையின் திரிகோணமலை அருகே கரையை கடக்கிறது. அதனை தொடர்ந்து, டிசம்பர் 3ம் தேதி மதியம் பாம்பனை நெருங்கும் புயல், டிசம்பர் 4ம் தேதி அதிகாலை தூத்துக்குடி அருகே மீண்டும் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

கரையை கடக்கும் போது மணிக்கு 70 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். அதனால், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் டிசம்பர் 5ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மேலும் புரேவி புயல் இலங்கையில் ஒரு முறையும், தூத்துக்குடி அருகே ஒரு முறையும் கரையை கடக்கும் என தனியார் வானிலை ஆய்வு நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது தென் தமிழக கடலோர மாவட்டங்களில் பலத்த சூறைக் காற்று வீசும் எனவும், வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் கூறியுள்ளது.


மேலும், தொலைத் தொடர்பு சேவைகள், மின்சாரம் துண்டிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தனியார் வானிலை ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது.

புரேவி புயல் காரணமாக பாம்பன் துறைமுகத்தில் 7ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதேபோல் தூத்துக்குடி துறைமுகத்தில் 6-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருப்பதால் தூத்துக்குடி துறைமுகத்தில், படகுகள் பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை - தூத்துக்குடி இடையேயான இரண்டு விமான சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.மேலும் படிக்க...'சாதிவாரி கணக்கெடுப்புக்கு முன்னர் அனைத்து தரப்பு மக்களிடம் கருத்து கேட்கவேண்டும்..' - தமிழச்சி தங்கபாண்டியன்..

நாள்தோறும் பெங்களுரு - தூத்துக்குடி இடையே ஒரு விமானமும், சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு மூன்று விமானமும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பிற்பகல் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு இயக்கப்படும் இரண்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதே சமயத்தில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு இன்று காலை கூடுதலாக சென்னை - தூத்துக்குடி இடையே ஒரு விமான சேவை இயக்கப்பட்டது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
First published: December 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading