Cyclone Burevi | அடுத்த 24 மணிநேரத்தில் வலுப்பெறும் புரேவி புயல்.. கரையை கடப்பது எங்கு? எப்போது?.. முழுவிவரம் இதோ..
Cyclone Burevi | வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக உருவெடுக்கும் எனவும், இது இலங்கையில் கரையை கடக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

வங்கக் கடலில் உருவாகும் புயல்... இலங்கையில் கரையை கடக்கும் : இந்திய வானிலை ஆய்வு மையம்
- News18 Tamil
- Last Updated: December 1, 2020, 10:11 AM IST
தென்கிழக்கு வங்கக்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. தற்போது கன்னியாகுமரியில் இருந்து 1,040 கிலோ மீட்டர் கிழக்கு திசையில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என கூறியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் அது புயலாக வலுப்பெறும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு 'புரெவி' என பெயரிடப்பட்டுள்ளது.
டிசம்பர் 2-ஆம் தேதி மாலை அல்லது இரவு நேரத்தில் புயலாக இலங்கையின் திரிகோணமலை அருகே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க...Tamil Nadu Weather: வங்க கடலில் இன்று புயல் உருவாகிறது.. தமிழக தென் மாவட்டங்களில் அடுத்த 3 நாள் கனமழைக்கு வாய்ப்பு.. 3-ஆம் தேதி காலை குமரி கடலை அடைந்து மேற்கொண்டு தென்தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என்றும் டிசம்பர் 2 மற்றும் 3-ஆம் தேதி கன்னியாகுமரி திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி இராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
டிசம்பர் 2-ஆம் தேதி மாலை அல்லது இரவு நேரத்தில் புயலாக இலங்கையின் திரிகோணமலை அருகே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க...Tamil Nadu Weather: வங்க கடலில் இன்று புயல் உருவாகிறது.. தமிழக தென் மாவட்டங்களில் அடுத்த 3 நாள் கனமழைக்கு வாய்ப்பு..
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.