Cyclone Burevi | புரெவி புயல் காரணமாக கடலூரில் அதிகனமழை எச்சரிக்கை.. புதுச்சேரி, சென்னை, காரைக்காலில் கனமழை எச்சரிக்கை..
கன்னியாகுமரி, தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று (நவம்பர் 04) அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கோப்பு படம்
- News18 Tamil
- Last Updated: December 4, 2020, 7:55 AM IST
புரெவி புயல் காரணமாக கடலூரில் அதிகனமழை எச்சரிக்கையும், காரைக்கால், புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கையும், அடுத்த 6 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தஞ்சை அதிராமபட்டினம், திருச்சி மாவட்டம் துவக்கடி, கடலூர், புதுச்சேரி, ஒரத்தநாடு பகுதிகளில் பரவலான கனமழை பதிவாகி வருகிறது. வங்க கடலில் மையம் கொண்டிருந்த புரெவி புயல் இன்று மன்னார் வளைகுடா பகுதியில் பாம்பனுக்கு அருகில் நிலை கொண்டுள்ளது. இப்புயல், 04.12.2020 இன்று அதிகாலை பாம்பன் - கன்னியாகுமரிக்கு இடையே, தென்தமிழக கடற்கரையை கடக்க கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாம்பன் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு எண் 3 ஏற்றப்பட்டுள்ளது.
அடுத்த ஆறு மணிநேரத்துக்கு, சென்னை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், காரைக்கால், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, சென்னை ஆகிய இடங்களில் ஒரு சில பகுதிகளில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
மேலும் புரெவி புயல் இன்று நள்ளிரவு பாம்பன் அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் கன்னியாகுமரி, தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று (நவம்பர் 04) அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் அடுத்த வருடம் 2021 ஜனவரி மாதத்தில் ஒரு சனிக்கிழமை வேலை நாள் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை எச்சரிக்கை