ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Cyclone Burevi | இலங்கை கடற்கரை கிராமங்களுக்கு இடையே கரையைக் கடந்தது புரெவி புயல்..

Cyclone Burevi | இலங்கை கடற்கரை கிராமங்களுக்கு இடையே கரையைக் கடந்தது புரெவி புயல்..

புரெவி

புரெவி

இலங்கையில் உள்ள திருகோணமலைக்கு வடக்கே குச்சவெளி - திரியாயி என்கிற கடற்கரை கிராமங்களுக்கு இடையே கரையைக் கடந்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான புரெவி புயல் அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது. இன்றிரவு இலங்கையின் திரிகோணமலை அருகே கரையை கடப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து, டிசம்பர் 3-ஆம் தேதி மதியம் பாம்பனை நெருங்கும் புயல், டிசம்பர் 4-ஆம் தேதி அதிகாலை தூத்துக்குடி அருகே மீண்டும் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதன்படி, நேற்றிரவு 10.30 முதல் 11.30க்கு இடைப்பட்ட நேரத்தில் திரிகோணமலைக்கு வடக்கே புரெவி புயல் கரையைக் கடந்ததும் தற்போது இப்புயலானது இலங்கை நிலப்பரப்பில் நிலவுகிறது.

பாம்பனிலிருந்து 180 கிமீ, கன்னியாகுமரியிலிருந்து 380 கிமீ தொலைவில் உள்ளது. தொடர்ச்சியாக மணிக்கு 12 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இன்னும் சில மணி நேரங்களில் இப்புயலானது மன்னார் வளைகுடா கடற்பகுதியில் பாம்பனுக்கு அருகே நிலை கொள்ளும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் உள்ள திருகோணமலைக்கு வடக்கே குச்சவெளி - திரியாயி என்கிற கடற்கரை கிராமங்களுக்கு இடையே கரையைக் கடந்தது.

Published by:Gunavathy
First published:

Tags: Burevi, Cyclone burevi