Home /News /tamil-nadu /

அசானி புயல்... தமிழகம், புதுவையில் இடி மின்னலுடன் மழை பெய்யும் - வானிலை ஆய்வுமையம்

அசானி புயல்... தமிழகம், புதுவையில் இடி மின்னலுடன் மழை பெய்யும் - வானிலை ஆய்வுமையம்

மழை

மழை

Cyclone Asani : அசானி புயல் காரணமாக இன்று மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 75 முதல் 85 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 95 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
    நேற்று மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய “அசானி” தீவிர புயல் (Asani Cyclone) இன்று (11.05.2022) காலை 02:30 மணி அளவில் புயலாக வலுவிழந்து 08:30 மணி அளவில் ஆந்திரபிரதேச மாநிலம் மசூலிப்பட்டினம் அருகே மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது வடக்கு-வடகிழக்கு திசையில் வடஆந்திரா கடலோர பகுதிகளின் வழியாக நகர்ந்து, இன்று (11.05.2022) இரவு மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், இன்று (மே 11) வட தமிழகம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமாரி மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    நாளை (வியாழக்கிழமை) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 13ஆம் தேதி முதல் முதல் 15ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

    தேக்கடி (தேனி), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), திருப்பூர் (திருப்பூர்) தலா 5, ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), பெரியார் (தேனி), திருப்பூர் (திருப்பூர்), பொன்னேரி (திருவள்ளூர்), பெரம்பூர் (சென்னை), தாம்பரம் (செங்கல்பட்டு), ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர்) தலா 3 செ.மீ.

    ஆர்.கே.பேட்டை (திருவள்ளூர்), வெம்பாக்கம் (திருவண்ணாமலை), அம்பத்தூர் (திருவள்ளூர்), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), பூண்டி (திருவள்ளூர்), கொடநாடு (நீலகிரி), திருவள்ளூர் (திருவள்ளூர்), தரமணி ARG (சென்னை), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), சத்யபாமா பல்கலைக்கழகம் ARG (செங்கல்பட்டு), திருவாலங்காடு (திருவள்ளூர்), சோளிங்கர் (ராணிப்பேட்டை), வாலாஜா (ராணிப்பேட்டை), ஊத்துக்குளி (திருப்பூர்). சென்னை விமானநிலையம் (சென்னை), எம்ஜிஆர் நகர் (சென்னை), செம்பரபாக்கம் (திருவள்ளூர்), சென்னை நுங்கம்பாக்கம் (சென்னை), திரூர் AWS (திருவள்ளூர்), YMC நந்தனம் (சென்னை), ACS மருத்துவக் கல்லூரி (காஞ்சிபுரம்), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை) தலா 2 செ.மீ..

    அண்ணா பல்கலைக்கழகம் ARG (சென்னை), திருத்தணி (திருவள்ளூர்), காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்), கொரட்டூர் (திருவள்ளூர்), சோழவரம் (திருவள்ளூர்), கோத்தகிரி (நீலகிரி), கலவாய் AWS (ராணிப்பேட்டை), தக்கலை (கன்னியாகுமரி), காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை), ஆலந்தூர் (சென்னை), கோபிசெட்டிபாளையம் (ஈரோடு), திருத்தணி PTO (திருவள்ளூர்), DGP அலுவலகம் (சென்னை), கூடலூர் (தேனி), உத்தமபாளையம் (தேனி), தாளவாடி (ஈரோடு), (கோவை), KVK காட்டுப்பாக்கம் (காஞ்சிபுரம்), பொன்னை அணை (வேலூர்), வாலாஜாபாத் (காஞ்சிபுரம்), நாகர்கோவில் (கன்னியாகுமரி), தாராபுரம் (திருப்பூர்), பவானிசாகர் (ஈரோடு), வால்பாறை PTO (கோவை), பூந்தமல்லி ( திருவள்ளூர்), எண்ணூர் AWS (திருவள்ளூர்), அரக்கோணம் (ராணிப்பேட்டை), செய்யாறு (திருவண்ணாமலை), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), திண்டுக்கல் (திண்டுக்கல்), குழித்துறை (கன்னியாகுமரி), காங்கேயம் (திருப்பூர்), குட் வில் பள்ளி, வில்லிவாக்கம் (திருவள்ளூர்) தலா 1 செ.மீ..

    மீனவர்களுக்கான எச்சரிக்கை

    இன்று (11.05.2022) மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 75 முதல் 85 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 95 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். சூறாவளி காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    ஆந்திர கடற்கரை பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். சூறாவளி காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    ஒரிசா கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்காள கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் தமிழக கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    Must Read : அயன் படபாணியில் போதை பொருள் கடத்தல்.. கோவையில் சிக்கிய உகாண்டா நாட்டு பெண்

    நாளை (12.05.2022) ஒரிசா கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்காள கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் தமிழக கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    வெள்ளிக்கிழமை (13.05.2022) மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் தமிழக கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே, மேற்குறிப்பிட்ட நாளில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், ஆழ் கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரை திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Cyclone Asani, Rain Forecast, Rain Update, Weather News in Tamil

    அடுத்த செய்தி