ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பள்ளிச் சிறுமிகளின் சமூக வலைதளப் பக்கங்களிலிருந்து வீடியோக்கள் திருட்டு.. ஆபாசப்படங்கள் தயாரித்த மூவர் கைது

பள்ளிச் சிறுமிகளின் சமூக வலைதளப் பக்கங்களிலிருந்து வீடியோக்கள் திருட்டு.. ஆபாசப்படங்கள் தயாரித்த மூவர் கைது

பள்ளிச் சிறுமிகளின் சமூக வலைதளப் பக்கங்களிலிருந்து வீடியோக்கள் திருட்டு.. ஆபாசப்படங்கள் தயாரித்த மூவர் கைது

பள்ளிச் சிறுமிகள் பயன்படுத்தும் சமூக வலைத்தளப் பக்கங்களுக்கு ஆபாச வீடியோவை அனுப்பிவந்த கும்பலைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

    சென்னை மயிலாப்பூரில் தனியார் பள்ளியில் படிக்கும் சிறுமி ஒருவர் சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகிறார். அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தின் இன்பாக்ஸில் ஒரு லிங்க் வந்துள்ளது. அதை சிறுமி திறந்தபோது அதில் ஆபாச வீடியோக்கள் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதை தன் பெற்றோரிடம் அவர் தெரிவிக்கவே இதுகுறித்து மயிலாப்பூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக மயிலாப்பூர் மகளிர் போலீசார் மற்றும் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த மகேந்திரன், அனாகாபுத்தூரைச் சேர்ந்த ஆனந்த கிருஷ்ணன், திண்டுக்கல்லைச் சேர்ந்த ராஜ்குமார் ஆகிய 3 பேரை மயிலாப்பூர் போலீசார் கைது செய்தனர்.

    இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமூக வலைதளமான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என பல சமூக வலைதளங்களில் இவர்கள் பல பெயர்களில் போலி கணக்கு வைத்துள்ளனர்.

    இதனை வைத்து சமூக வலைதளங்களில், குறிப்பாக பள்ளிச் சிறுமியர்கள் பயன்படுத்தும் சமூக வலைதளப் பக்கங்களைக் குறிவைத்து அவர்களுடைய அதில் இடப்பட்டிருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைத் திருடி அவற்றை ஆபாசமாக மாற்றி இதை தங்களுக்கென உள்ள பிரத்தியோகமாக வாட்ஸ்அப் குரூப்பில் ஷேர் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் என்பது தெரியவந்தது.

    Also read: சாத்தான்குளத்தை நினைவுபடுத்தும் விருதாச்சலம் சம்பவம்.. கைதி உயிரிழந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்

    சமூக வலைதளங்களில் சில சிறுமிகளுக்கு இதுபோன்ற ஆபாச வீடியோக்களை அனுப்பி அதன் மூலம் அவர்களுடைய பாலுணர்வைத் தூண்டி, அதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இதற்காகவே உள்ள ஆபாச இணையதளங்களிலும் சென்று சிறார்கள் குறித்த ஏராளமான ஆபாச வீடியோக்களையும் தங்களுடைய செல்போனில் பதிவிறக்கம் செய்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், இதேபோன்று சிறார்கள் சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோக்கள் அடங்கியுள்ள ஏராளமான ஆபாச இணையதளங்களில் முகவரிகளையும் இவர்கள் சேமித்து வைத்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    Published by:Rizwan
    First published:

    Tags: Crime | குற்றச் செய்திகள், Cyber attack