Home /News /tamil-nadu /

நீங்கள் சிங்கிளா..? உங்கள் பாலியல் ஆசையைத் தூண்டி ஆபத்தில் சிக்கவைக்கும் எஸ்.எம்.எஸ். மெசேஜ்... எச்சரிக்கை ரிப்போர்ட்

நீங்கள் சிங்கிளா..? உங்கள் பாலியல் ஆசையைத் தூண்டி ஆபத்தில் சிக்கவைக்கும் எஸ்.எம்.எஸ். மெசேஜ்... எச்சரிக்கை ரிப்போர்ட்

மாதிரி படம்

மாதிரி படம்

பாலியல் சேவைக்காக பெண்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என பலரது செல்போன் எண்களுக்கும் மோசடி எஸ்.எம்.எஸ் வந்து கொண்டிருக்கிறது..

  • News18
  • Last Updated :
”டியர் சார், நீங்கள் தனிமையில் இருக்கிறீர்களா? உங்கள் தனிமையைத் தீர்ப்பதற்கு உங்களுக்குத் துணை வேண்டுமா? உங்கள் பகுதியில் இருந்தே உங்களுக்கான பெண்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும்”

இப்படியான எஸ்.எம்.எஸ்.-ஐ பலரும் தங்கள் செல்பேசியில் பெற்று இருக்க கூடும்.  தனிமையில் இருக்கும் ஆண்களை, பெண்களை குறிவைக்கும் இந்த மாதிரி மெசேஜ்கள் படையெடுத்திருப்பது விசாரணையில் அதிர்ச்சி அளிக்கிறது.

இதுபோன்ற எஸ்.எம்.எஸ்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் சில எண்களைத் தொடர்பு கொண்டோம். முதலில் தொடர்பு கொண்ட இரண்டு செல்போன் எண்களும் பிஸியாக இருந்தன. பிஸியாக இருப்பதாக வங்காள மொழியில் கூறப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மூன்றாவதாக மற்றொரு செல்போன் எண்ணிற்குத் தொடர்புகொண்டு பேசினோம். மறுமுனையில் ஒரு பெண்ணின் குரல் கேட்டது. அவர் நம்மிடம் இந்தியில் பேசினார். அவரிடம் ஆங்கிலத்தில் பேச முடியுமா என்று நாம் கேட்டவுடன், ‘முடியும்!’ என்று கூறி, தட்டுத்தடுமாறி சரளமின்றி ஆங்கிலத்தில் உரையாடத் தொடங்கினார்.அந்தப் பெண்ணிடம் அவர் எங்கு இருப்பதாகக் கேட்க, அவர் தான் மேற்கு வங்காளத்தில் இருப்பதாகவும், நம் பகுதிகளிலேயே அவருக்குப் பெண்கள் பணியாற்றுவதாகவும் கூறினார். தொடர்ந்து அவரிடம் நாம் சென்னையில் இருந்து பேசுவதாகக் கூறியபோது, சென்னையில் நுங்கம்பாக்கத்தில் அவர்களது தலைமை அலுவலகம் இருப்பதாகத் தெரிவித்தார். மேலும், வடபழனி, தி நகர், கோடம்பாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கிளை அலுவலகம் இருப்பதாகவும், அங்குள்ள பெண்கள் நம்மைத் தொடர்பு கொள்வார்கள் என்றும் தெரிவித்தார்.

மற்றொரு எண்ணில் இருந்து நாம் அழைத்து பேசினோம். அப்போது, நாம் கோவையில் இருப்பதாகத் தெரிவித்த கணத்தில், மறுமுனையில் ஆர்.எஸ்.புரம், காந்திபுரம், சிங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் தங்களுக்குப் பெண்கள் இருப்பதாக அந்த நபர் கூறினார்.மேலும், திருமணம் ஆகாத பெண்கள், திருமணமான பெண்கள் என எப்படிப்பட்ட பெண்கள் தேவைப்பட்டாலும் அனுப்பி வைப்போம் என்று கூறிய அந்தப் பெண், முதல் கட்டமாக 2100 ரூபாய் பணத்தைப் பதிவுக் கட்டணமாகச் செலுத்திவிட்டால், ஆறு மாதங்களுக்கு நமக்கு வேலிடிட்டி அளிக்கப்படும் என்று விளக்கினார்.

இதன் பின், ”நீங்கள் இருக்கும் பகுதியில் உள்ள பெண்கள், உங்களுடன் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுகிறீர்களோ அப்படி இருப்பார்கள்” என்று கூறிய அவர், அந்தப் பெண்களை டேட்டிங், கேசுவல் மீட்டிங், பாலியல் தேவை முதலானவற்றிக்கும் ஒத்துழைப்பார்கள் என்றும் கூறினார். நாமும் பணத்தைத் தயார் செய்துவிட்டு அவர்களைத் தொடர்பு கொள்வதாகக் கூறி, இணைப்பைத் துண்டித்தோம். இரு எண்களிலுமே 2100 ரூபாய் கட்டணம் என்று கூறப்பட்டது.

சர்வதேச சைபர் குற்ற வழக்கறிஞர்


இந்த விவகாரத்தின் பின்னணியில் சட்டவிரோத செயல்களோ, பண மோசடி செய்யும் கும்பல்களோ இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சைபர் க்ரைம் வழக்கறிஞர் கார்த்திகேயனிடம் பேசினோம்.

அவர் ``இப்படியான எஸ்.எம்.எஸ்-கள் அனைத்தும் சட்ட விரோதமானது. இவை அனுப்பப்படுவதற்கு முக்கிய காரணமாக இருப்பவை, சிம் கார்ட் விற்பனை செய்யும் நிறுவனங்கள்.

இவ்வாறான விவகாரங்களுக்கு இந்நிறுவனங்களே பொறுப்பு. ஒரே அடையாள அட்டையைப் பயன்படுத்தி, ஒன்றுக்கும் மேற்பட்ட சிம்கார்டுகளை வாங்க முடியும் என்ற சூழல், சந்தையில் நிலவுவதால் இதனை சமூக விரோதிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர்” என்றார்.

இவ்வாறான எஸ்.எம்.எஸ்-கள் மூலம் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து புகார்கள் வருகிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ``இது தொடர்பான புகார்கள் அதிகம் இருந்தாலும் அதனை யாரும் பதிவு செய்ய முன்வரவில்லை. மேலும் தேசிய குற்றப்பதிவை பார்த்தால், சைபர் கிரைம் தொடர்பான புகார்கள் தமிழ்நாடு முழுவதும் ஆண்டுக்கு 100 குற்றங்கள் கூட பதிவு செய்யப்படுதில்லை” என்று கூறினார்.

``இது சென்சிடிவான விவகாரமாக இருப்பதால் ஏமாறுபவர்கள் பலரும் பொதுவெளியில் கூறுவதில்லை. அதையும் மீறி காவல்துறையிடம் பாதிக்கப்பட்டவர்கள் முறையிடும் போது, காவல் துறையினர் பாதிக்கப்படுபவர்களிடமே கேள்வி கேட்பதைக் கண்டு பலரும் அச்சப்படுகின்றனர்” என்று கூறினார்.

Also read... மூன்றே நாட்களில் 2700 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் - அமைச்சர் மா.சுப்ரமணியன்

வழக்கறிஞர் கார்த்திகேயன் இதுபோன்று தான் சந்தித்த ஒரு வழக்கு குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

”இரண்டு ஆண்டுகளுக்கு முன், ஒரு செல்போன் எண்ணில் இருந்து 19 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவருக்குப் பெண் பெயரில் இந்த மாதிரியான எஸ்.எம்.எஸ் வந்துள்ளது. அந்த எண்ணிற்குத் தொடர்ந்து எஸ்.எம்.எஸ் அனுப்பிய  அந்த இளைஞரிடம் தொடர்ந்து பேசிய அந்தப் பெண் நேரில் சந்திக்கலாம் என்று கூறியுள்ளர்.

நேரில் சந்தித்த போது, அந்த இளைஞரிடம் உள்ள பைக், செல்போன் போன்ற விவரங்களைத் தெரிந்துகொண்டு மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ள பகுதிக்குச் சந்திக்க அழைத்துள்ளனர். அந்த இளைஞரும் தன்னிடம் பெண் தான் பேசுகிறாள் என்று நம்பி அந்த இடத்திற்குச் செல்ல, அங்கு வந்த சில ஆண்கள் அந்த இளைஞரிடம் இருந்து பைக், செல்போன் மற்றும் தங்க செயின் உள்ளிட்டவற்றைப் பறித்துக்கொண்டு அந்த இளைஞரைத் தாக்கிவிட்டு சென்றுள்ளனர்” என்றார்.

முடிவாக அவர், “இவ்வாறான எஸ்.எம்.எஸ்-களை மக்கள் நம்ப வேண்டாம். இவை நம்முடைய ஆர்வத்தை தூண்டும் விதமாகவும், பாதுகாப்பானது போலத் தோற்றம் அளிப்பதாகவும் இருக்கும். ஆதலால் அவற்றை நம்பி ஏமாற வேண்டாம்” என்றார். மேலும் அவர் இவ்வாறான செயல்கள் மேற்கு வங்காளத்திலோ, ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து மட்டும் நிகழ்வதில்லை என்றும், நம் பகுதிகளிலும் நிகழ்வதாகவும் தெரிவித்தார்.

மக்களின் தனிமையைப் பயன்படுத்தி, எளிதில் மோசடி செய்வதற்காக இப்படியான கும்பல்கள் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி வருகின்றனர். நம் கையடக்கத்தில் உலகமே அடங்கியிருந்தாலும், நாம் பாதுகாப்பாக இருப்பதும் நமது கைகளில் மட்டுமே இருக்கிறது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Crime | குற்றச் செய்திகள், Cyber crime, Online crime

அடுத்த செய்தி