முகப்பு /செய்தி /தமிழ்நாடு / வெளிநாட்டு ஆன்லைன் சூதாட்டம் மூலம் தமிழகத்தில் ₹10 கோடி மோசடி செய்த மென்பொறியாளர்கள்

வெளிநாட்டு ஆன்லைன் சூதாட்டம் மூலம் தமிழகத்தில் ₹10 கோடி மோசடி செய்த மென்பொறியாளர்கள்

கைதான ஆன்லைன் மோசடி கும்பல்

கைதான ஆன்லைன் மோசடி கும்பல்

மோசடி செய்த பணத்தை கிரிப்டோகரென்சி மூலமாக வெளிநாடுகளுக்கு அனுப்பியதை சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

  • Last Updated :

கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஆனந்த் அரசு என்பவர் கடந்த மாதம் கள்ளக்குறித்து சைபர் கிரைம் போலீசில் ஆன்லைன் விளையாட்டு இணையதளம் மூலமாக லட்சக்கணக்கில் தன்னை மோசடி செய்துள்ளதாக புகார் அளித்தார். புகாரின்பேரில் மென்பொறியாளர் சசிகுமார் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையில் சென்னையில் மென்பொறியாளராக பணியாற்றியபோது அங்கு உடன் பணியாற்றிய சென்னையைச் சேர்ந்த சாய்குமார், ராஜ்குமார், ராஜேஷ்குமார், முகமது ஆசிப் என ஐந்து நபர்கள் ஒன்றிணைத்து வெளிநாடுகளில் இருக்கும் ஆன்லைன் விளையாட்டுக்களை இந்தியாவில் விளையாடச் செய்து அதன் மூலம் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களிடம் இருந்து 10 கோடிக்கும் மேல் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து காவல்துறை தலைமையக சைபர் கிரைம்  கண்காணிப்பாளர் சிபி சக்கரவரத்தி தனிப்படை அமைத்து குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டதன் பேரில் தலைமறைவாக இருந்த மற்ற 4 குற்றவாளிகளையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

போலீசார் விசாரணையில் ரஷ்யாவில் இருந்து இயங்கும் ஒன் எக்ஸ் வகை ஆன்லைன் விளையாட்டுகளை இந்தியாவில் சமூக வலைதளங்கள் மூலம் விளம்பரப்படுத்தி அதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வலை விரித்து மோசடி கும்பல் மோசடியில் ஈடுபட்டது அம்பலமானது. மேலும், வெளிநாடுகளில் இருந்து இயங்கும் மோசடி கும்பலுக்கு தமிழகத்தில் இவர்கள் இடைத் தரகராக செயல்பட்டு வந்துள்ளார்கள் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இதையும் படிங்க:  ‘தடுக்க முடியலைனா பாலியல் வன்புணர்வை என்ஜாய் பன்னுங்க’ - காங்கிரஸ் எம்.எல்.ஏ பேச்சால் சர்ச்சை

குறிப்பாக சமூக வலைதளங்கள், மொபைல் குறுஞ்செய்தி மூலம் இது போன்ற விளையாட்டுகளை விளம்பரப்படுத்தி இவர்கள் மோசடி வலையை விரித்ததும் அதன் மூலம் இவர்கள் ரூ.10 கோடிக்கும் மேல் மோசடி செய்துள்ளதும் தெரியவந்தது.

ஆரம்பத்தில் விளையாட செல்லும் நபர்களுக்கு இவர்கள் தங்களது சொந்தப் பணத்தைக் வங்கிகள் மூலம் அனுப்பி அவர்களை நம்ப வைத்து பிறகு அவர்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணத்தை மோசடி செய்துள்ளனர். குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து இயங்கும் இந்த வகை விளையாட்டுகளுக்கு கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களும் தங்களது சொந்தப் பணத்தைப் கொடுத்து விளையாட்டுகளுக்கான பாஸ்வேர்ட் மற்றும் ஐடி பெற்று தமிழகத்தின் மோசடி சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர்.

இதையும் படிங்க:   காதலியின் கணவரிடம் இருந்து தப்ப 5வது மாடியில் இருந்து குதித்த இளைஞர் மரணம்

மோசடி செய்யும் பணத்தை பல்வேறு வங்கி கணக்கிற்கு அனுப்பி பின்பு அதனை பிட்காயின் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்து, வெளிநாட்டு மோசடி கும்பலுக்கு அனுப்பியுள்ளனர். பின்னர் வெளிநாட்டில் இயங்கும் மோசடி கும்பல் அந்தந்த நாட்டு பணமாக மாற்றி இந்த வகை மோசடியை அரங்கேற்றி வந்துள்ளதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். இது போல தமிழகத்தில் மட்டும் 10,000 க்கும் அதிகமான நபர்களிடமிருந்து சுமார் ரூ.10 கோடிக்கும் மேல் மோசடி செய்துள்ளனர்.

இதையும் படிங்க:   ஷீனா போரா உயிரோடு தான் இருக்கிறார் - ஷாக் கொடுத்த இந்திராணி முகர்ஜி - அதிரடி திருப்பம்

top videos

    கைது செய்யப்பட்ட 5 நபர்களிமிருந்து இரண்டு லேப்டாப், ஒரு கம்ப்யூட்டர், பத்து செல்போன்கள் 27 ஏடிஎம் கார்டுகள், 4 பென்டிரைவ்கள், 340 சிம்கார்டுகள், ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இது போன்று தரகர்கள் செயல்படுவதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  அவர்கள் குறித்த விசாரணையில் சைபர் கிரைம் போலீசார் ஈடுப்பட்டுள்ளனர்.

    First published:

    Tags: Crime News, Cyber crime, Game, Game Applications, Online crime