• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பப்ஜி மதன், மனைவிக்கு எதிராக 1,600 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல்

பப்ஜி மதன், மனைவிக்கு எதிராக 1,600 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல்

பப்ஜி மதன்

பப்ஜி மதன்

பப்ஜி மதன், அவரது மனைவிக்கு எதிராக சைபர் க்ரைம் காவல்துறை 1,600 பக்க குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.

  • Share this:
பப்ஜி விளையாட்டை ஆபாசமாக பேசி அதனை யூடியூபில் பதிவேற்றம் செய்து வந்த ஆபாச யூடிபர் மதன் மீது ஏராளமான புகார்கள் வந்ததையடுத்து கடந்த ஜூன் 18-ஆம் தேதி சைபர் கிரைம் போலீசாரால் பப்ஜி மதன் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட பஜ்ஜி மதன் சைபர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு ஜூலை மாதம் 6-ம் தேதி அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ், சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நடவடிக்கை எடுத்தார். கைது செய்யப்பட்ட பப்ஜி மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகா ஆகிய இருவரும் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் குழந்தையை காரணம்காட்டி கிருத்திகாவுக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இந்த நிலையில் பப்ஜி மதன் தனது மீதான குண்டர் சட்டத்தை நீக்குமாறு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கானது சில தினங்களுக்கு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கு குறித்த விவரங்களை நீதிமன்றத்தில் உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் என காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் பப்ஜி மதன் மற்றும் அவரின் மனைவிக்கு எதிராக 1,600 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சைபர் கிரைம் போலீசார் தாக்கல் செய்துள்ளனர். குற்றப்பத்திரிக்கையில் முதல் குற்றவாளியாக மதனும் அடுத்ததாக அவரின் மனைவி கிருத்திகாவும் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு எதிரான 32 புகார்கள் மற்றும் 32 சாட்சியங்கள் இடம்பெற்றுள்ளன. இதற்கிடையில் மதன் 2,848 பேரிடம் கொரோனா உதவி செய்வதாகக் கூறி 2.89 கோடி ரூபாய் பெற்று பணமோசடி செய்ததன் அடிப்படையில் அவர் மீது பண மோசடி (420) பிரிவின் கீழ் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நீதிமன்ற உத்தரவின் பேரில் மதன் ஆபாசமாக யூ-டியூபில் பேசிய ஆடியோ சைபர் ஆய்வகத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது எனவும் அது முடிந்தபின் கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என மத்திய குற்றப்பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இவ்வழக்கில் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள், 4 கோடி ரூபாய் பணம் சம்மந்தப்பட்டிருப்பதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 150 க்கும் மேற்பட்ட புகார்கள் அளிக்கப்பட்டிருந்தாலும் அவற்றில் 32 புகார்கள் மட்டுமே முறையான எழுத்துப்பூர்வ புகார்களாக ஆதாரங்களுடன் பெறப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பப்ஜி மதன் பணம் மோசடி செய்திருப்பது உறுதி ஆனதால் அவர் மீது சைபர் கிரைம் போலீசார் மோசடி வழக்கு தற்போது பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Karthick S
First published: