முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கறுப்பர் கூட்டம் சேனலின் 500-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் நீக்கம் - சைபர் கிரைம் போலீஸ் தகவல்

கறுப்பர் கூட்டம் சேனலின் 500-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் நீக்கம் - சைபர் கிரைம் போலீஸ் தகவல்

கறுப்பர் கூட்டம்.

கறுப்பர் கூட்டம்.

கறுப்பர் கூட்டம் சேனலில் சர்ச்சைக்குரிய வீடியோக்கள் பல இருப்பதாலும், அதனால் மேலும் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட கூடும் என்பதாலும் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளதாக சைபர் க்ரைம் போலீஸார் விளக்கியுள்ளனர்

  • Last Updated :

கந்த சஷ்டி கவசம் குறித்த சர்ச்சை வழக்கில் கறுப்பர் கூட்டம் யுடியூப் சேனல்  நிர்வாகிகள் சுரேந்திரன் நடராஜன், செந்தில் வாசன் இருவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் கறுப்பர் கூட்டம் இணைய தள சேனலின் கேமரா மேன் சோமசுந்தரம், வீடியோ எடிட்டர் குகன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே கறுப்பர் கூட்டம் சேனலில் பதிவேற்றப்பட்ட வீடியோக்கள் முடக்கப்பட்டதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். கறுப்பர் கூட்டம் இணைய சேனலை முடக்க வேண்டும் என யூ ட்யூப் நிறுவனத்திற்கு சைபர் கிரைம் போலீசார் கடிதம் எழுதியிருந்த நிலையில் சேனலை உடனடியாக முடக்குவதில் நடைமுறை சிக்கல் உள்ளதால்,  வீடியோக்களை பொதுமக்கள் பார்வையில் இருந்து மறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

தொழில்நுட்ப குளறுபடியால் அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதில் சிக்கல்..

கறுப்பர் கூட்டம் சேனலை ஒட்டுமொத்தமாக யூ ட்யூப் நிறுவனம்தான் முடக்க முடியும். இருப்பினும் அதில் சர்ச்சைக்குரிய வீடியோக்கள் பல இருப்பதாலும், அதனால் மேலும் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட கூடும் என போலீஸார் கருதுவதால் பொதுமக்கள் யாரும் அந்த வீடியோக்களை பார்க்க முடியாதபடி நீக்கப்பட்டதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்

First published:

Tags: Cyber attack, Youtube