முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஆன்லைனில் நூதன மோசடி.. ரூ.6 கோடி பறித்த நபர்கள் கைது..

ஆன்லைனில் நூதன மோசடி.. ரூ.6 கோடி பறித்த நபர்கள் கைது..

ஆன்லைனில் நூதன மோசடி.. ரூ.6 கோடி பறித்த நபர்கள் கைது..

போலியான வெளிநாட்டுப் பணப் பரிவர்த்தனை நிறுவனம் மூலம், போலி இணையதளங்களை உருவாக்கி ஆன்லைனில் வேலை தேடிய 750 பேரிடம் 6 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக இரண்டு நபர்களை சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

  • Last Updated :

சென்னை திருவேற்காட்டைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவர் எலக்ட்ரீஷியனாகப் பணிபுரிந்து வருகிறார். ஆன்லைனில் வேலைவாய்ப்பு தேடும் இணையதளத்தில் பதிவு செய்திருந்தார். அப்போது வெளிநாட்டு எண்களில் இருந்து அபுதாகிர் மற்றும் அலி ஹுசைன் என்ற 2 பேர் அசோக்குமாரைத் தொடர்பு கொண்டனர். Deltin International Solution என்ற வெளிநாட்டுப் பணப் பரிவர்த்தனை நிறுவனத்தின் இயக்குநர்கள் என அறிமுகப்படுத்திக் கொண்டனர். தங்கள் நிறுவனம் மூலம் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர்

அதை நம்பிய அசோக்குமாரும் 10,54,000 ரூபாய் முதலீடு செய்துள்ளார். ஆனால் சொன்னபடி அவருக்கு லாபம் கிடைக்கவில்லை. இயக்குநர்களையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

சந்தேகமடைந்த அசோக்குமார், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகாரளித்தார். சென்னை மத்திய குற்றப் பிரிவில் உள்ள சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்பு கொண்ட இணைய தள எண்களின் ஐபி முகவரி மூலம் நிறுவனம் இருந்ததாகக் கூறப்படும் வடபழனியில் போலீசார் ஆய்வு செய்ததில், நீண்ட நாட்களுக்கு முன்னதாக காலி செய்து விட்டதாக தகவல் கிடைத்தது. அவர்கள் பயன்படுத்திய வெளிநாட்டு எண்களை ஆய்வு செய்தபோது, புதிதாக ஒரு நிறுவனத்தை உருவாக்கி மோசடியில் இறங்கி இருப்பது தெரியவந்தது.

செல்போன் சிக்னல்களை வைத்து சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த செய்யது அபுதாகிர் மற்றும் கடலூரைச் சேர்ந்த அலி ஹுசைன் ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில் இவர்கள் போலி வெளிநாட்டு பணப் பரிவர்த்தனை நிறுவனத்தை உருவாக்கி, அதன் மூலம் போலி இணையதளங்களை உருவாக்கியது தெரியவந்துள்ளது.

குறிப்பாக ஆன்லைன் மூலம் வேலை தேடுபவர்களில் பங்கு வர்த்தகம் குறித்து தெரியாத நபர்களைத் தேர்ந்தெடுத்து இந்த மோசடியை அரங்கேற்றியுள்ளனர். இருவரும் இந்தியா முழுவதும் சுமார் 750 பேரை மோசடி செய்து அவர்களிடம் இருந்து 6 கோடி ரூபாய் பறித்துள்ளனர்.

தமிழகத்தில் மட்டும் இவர்களிடம் 60 பேர் பணத்தை இழந்துள்ளனர்; அவர்கள் அடையாளம் காணப்பட்டு விசாரணையும் நடந்து வருகிறது. கொள்ளையடித்த பணத்தை வைத்து இருவரும் சொகுசாக வாழ்ந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க.,.. கள்ளக்காதல் விபரீதம்.. கணவனைக் கொன்று புதைத்த மனைவி...

' isDesktop="true" id="435971" youtubeid="8KqQfXWMLxs" category="tamil-nadu">

கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்தும், ஒரு லட்சத்து 94000 ரூபாய் மற்றும் 5 மடிக்கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இருவரையும் காவலில் எடுத்து விசாரித்தால் மேலும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். ஆன்லைன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவோர், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உண்மைத் தன்மையை அறிந்து முதலீடு செய்யுமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

top videos

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published:

    Tags: Cheating case, Crime | குற்றச் செய்திகள்