இது வழக்கமான லாக்-அப் மரணங்கள் போல் இல்லை.. அமைச்சர் சி.வி சண்முகம்..

தந்தை, மகன் உயிரிழக்க காரணமானவர்களுக்கு உரிய தண்டனையை அரசு பெற்றுத் தரும் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் உறுதிபடக் கூறியுள்ளார். 

இது வழக்கமான லாக்-அப் மரணங்கள் போல் இல்லை.. அமைச்சர் சி.வி சண்முகம்..
சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம்
  • Share this:
தந்தை, மகன் உயிரிழக்க காரணமானவர்களுக்கு உரிய தண்டனையை அரசு பெற்றுத் தரும் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் உறுதிபடக் கூறியுள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாத்தான்குளத்தில் அப்பாவி இருவரது இறப்பை வைத்து, அரசியல் ஆதாயம் தேட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டு சூழ்ச்சிகள் செய்வதாக சாடியுள்ளார்.

இது வழக்கமான லாக் அப் மரணங்கள் போல் இல்லாமல், காவலர்கள், அரசு மருத்துவர்கள், நீதிபதி, சிறை அதிகாரிகள் என பலர் மீது கடும் குற்றச்சாட்டு எழுந்திருக்கும் நிலையில், தவறு இழைத்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையாக தண்டிக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.உடல் கூராய்வு முடிவு, மாஜிஸ்திரேட் பாரதிதாசனின் அறிக்கை அடிப்படையில், குற்றவாளிகள் மீது சட்ட நடவடிக்கைகள் கடுமையாக தொடர இருப்பதாகக் கூறியுள்ள அமைச்சர், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்க வேண்டும் என்பதில் அரசு உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Also read... பீகார் சட்டப்பேரவை தேர்தல்... கொரோனா நோயாளிகள் தபால் வாக்கு அளிக்க அனுமதி..மேலும், தந்தை, மகன் உயிரிழக்க காரணமானவர்களுக்கு, உரிய தண்டனையை, உச்சபட்ச தண்டனையை பெற்றுத் தருவோம் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
First published: July 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading