சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் கடந்த மாதம் ஜூலை 11ஆம் தேதி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஆதரவாளர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இந்த மோதலில் அதிமுக அலுவலகம் அமைந்துள்ள தெருவில் உள்ள கார் உள்ளிட்ட வாகனங்கள் சேதமடைந்தன. இந்த வன்முறை சம்பவத்தை அடுத்து, கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.
இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றவும், அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும், ஒரு மாத காலத்திற்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோரை அலுவலகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையும் படிங்க: தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் - வானிலை மையம் எச்சரிக்கை
இதனிடையே அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டது தொடர்பாக, சி.வி.சண்முகம் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வம் மீது, ராயப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அலுவலகம் மூடியிருக்கும் என்று அறிந்தே, அத்துமீறி உள்ளே சென்று, அங்கிருந்த ஆவணங்கள் மற்றும் பொருட்களை ஓபிஎஸ் தரப்பு திருடிச் சென்றதாக புகாரில் தெரிவிக்கப்பட்டது. இதன் பேரில் ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உட்பட பலர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் ஓபிஎஸ் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, CV Shanmugam, OPS