ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழில் பெயர் வைத்தால் இவ்வளவு நன்மையா...? பிரியாணி கடையின் வித்தியாச அறிவிப்பில் மகிழ்ந்த வாடிக்கையாளர்கள்!

தமிழில் பெயர் வைத்தால் இவ்வளவு நன்மையா...? பிரியாணி கடையின் வித்தியாச அறிவிப்பில் மகிழ்ந்த வாடிக்கையாளர்கள்!

தொப்பி வாப்பா கடை

தொப்பி வாப்பா கடை

  • News18
  • 1 minute read
  • Last Updated :

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு  தமிழில் பெயர் வைத்த  வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக பிரியாணி விருந்து அளித்து தொப்பி வாப்பா கடையினர் அசத்தியுள்ளனர்.

இன்று (பிப்ரவரி 21) உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு விக்கிபீடியா துவங்கி பிரியாணி கடை வரை தமிழ் மொழி கொண்டாடப்பட்டு வருகிறது.

காதலர் தினம், வேட்டி தினம் தொடங்கி தற்போது தாய்மொழி தினத்துக்கும் வித்தியாசமான ஒரு அறிவிப்பை வெளியிட்டது. சென்னையில் உள்ள தொப்பி வாப்பா பிரியாணி கடை. "தமிழ் பெயர் வைத்தவர்கள் மற்றும் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் பெயர் வைத்த பெற்றோர்களுக்கு இலவசமாக பிரியாணி வழங்கப்படும்" என்பது தான் அந்த அறிவிப்பு.

அதனை தொடர்ந்து, இன்று மதியம் அந்த கடையின் கிளைகளில் 50 நபர்களுக்கு இலவசமாக பிரியாணி வழங்கி, தமிழ் பெயர் வைத்ததற்காக பாராட்டு சான்றிதழும் வழங்கி கவுரவித்தது அந்த கடை.

தமிழ் ஆர்வலராகவும், பிரியாணி பிரியராகவும் உள்ளவர்களுக்கு இது "கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா" டைப் சந்தோஷம் என்று மகிழ்ச்சி தெரிவித்து சென்றார்கள் வாடிக்கையாளர்கள்.

Also see...

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Chennai