ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

இந்த வங்கியில் 10,000க்கு மேல் வரவு வைத்தாலே இனி கட்டணம் வசூல் - 2022 ஜனவரி 1 முதல் புதிய விதி அமல்!

இந்த வங்கியில் 10,000க்கு மேல் வரவு வைத்தாலே இனி கட்டணம் வசூல் - 2022 ஜனவரி 1 முதல் புதிய விதி அமல்!

அதிகபட்ச வைப்பு தொகையான 10,000 ரூபாய்க்கு மேல் வரவு வைக்கப்பட்டால் 0.50% அல்லது ஒரு பரிவர்த்தனைக்கு 25 ரூபாய் என கட்டணம் வசூலிக்கப்படும்.

அதிகபட்ச வைப்பு தொகையான 10,000 ரூபாய்க்கு மேல் வரவு வைக்கப்பட்டால் 0.50% அல்லது ஒரு பரிவர்த்தனைக்கு 25 ரூபாய் என கட்டணம் வசூலிக்கப்படும்.

அதிகபட்ச வைப்பு தொகையான 10,000 ரூபாய்க்கு மேல் வரவு வைக்கப்பட்டால் 0.50% அல்லது ஒரு பரிவர்த்தனைக்கு 25 ரூபாய் என கட்டணம் வசூலிக்கப்படும்.

  • 2 minute read
  • Last Updated :

வரும் புத்தாண்டு முதல், அமல்படுத்தப்படவிருக்கும் புதிய விதியின் கீழ் இனி இந்த வங்கியில் 10,000 ரூபாய்க்கு மேல் வரவு வைத்தாலே, வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தபால்துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க் (IPPB) தனது வாடிக்கையாளர்களுக்கு சமீபத்தில் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் புத்தாண்டும் துவங்கி இந்த வங்கியில் குறிப்பிட்ட வகை கணக்குகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள உச்சவரம்புக்கு மேல் பணம் வரவு வைத்தால், வாடிக்கையாளர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘வீட்டின் வாசல் படியில் வங்கி சேவை’ என்ற நோக்கத்துடன் கடந்த 2018ம் ஆண்டு துவங்கப்பட்டு, சுமார் 4 கோடி வாடிக்கையாளர்களுடன் இயங்கி வரும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க் ஆனது வணிக கணக்கு மற்றும் 3 வகையான சேமிப்பு கணக்குகளை கொண்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் பலவிதமான அம்சங்கங்களையும், செயல்பாட்டையும் கொண்டுள்ளன.

இதையும் படிங்க:  மகளிர் நல மேம்பாட்டில் இந்தியாவுக்கு வழிகாட்டிய தமிழகம்!

அதன்படி பேசிக் சேவிங்க்ஸ் என்ற வகையை தவிர்த்து பிற சேமிப்பு கணக்குகளில் வரும் ஜனவரி 1ம் தேதி முதல் அதிகபட்ச வைப்பு தொகையான 10,000 ரூபாய்க்கு மேல் வரவு வைக்கப்பட்டால் 0.50% அல்லது ஒரு பரிவர்த்தனைக்கு 25 ரூபாய் என கட்டணம் வசூலிக்கப்படும். இதே போல சேமிப்பு மற்றும் வணிக கணக்குகளில் இருந்து அதிகபட்சமாக 25,000 ரூபாய் வரை இலவசமாக பணம் எடுத்துக் கொள்ளலாம். அதற்கு மேல் சென்றால் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 0.50% அல்லது 25 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும்.

இதையும் படிங்க:  ஆசியாவுடன் கடலுக்கடியிலான ஃபைபர்-ஆப்டிக் கேபிள் சிஸ்டம் - கூகுள், மெட்டாவிற்கு அமெரிக்கா ஆதரவு

பேசிக் சேவிங்க்ஸ் வகை வங்கி வாடிக்கையாளர்களுக்கு பணம் வரவு வைக்க உச்சவரம்பு எதுவும் கிடையாது. ஆனால் பிற வகை கணக்குகளில் இருந்து பணம் எடுக்க 4 இலவச பரிவர்த்தனைகளுக்கு மேல் நடைபெறும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 0.50% அல்லது 25 ரூபாய் கட்டணம் பிடித்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள இந்த நடைமுறை வரும் ஜனவரி 1, 2022 முதல் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

First published: