• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கலப்பட பெட்ரோல் விநியோகிப்பதாக குற்றச்சாட்டு: பெட்ரோல் பங்க்கை முற்றுகையிட்ட பொதுமக்கள்

கலப்பட பெட்ரோல் விநியோகிப்பதாக குற்றச்சாட்டு: பெட்ரோல் பங்க்கை முற்றுகையிட்ட பொதுமக்கள்

பெட்ரோலில் கலப்படம்

பெட்ரோலில் கலப்படம்

தெங்கம்புதூர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் நேற்றிரவு பெட்ரோல் நிரப்பிய வாகனங்களில் வழக்கத்தை விட அதிகமாக புகை வெளியேறியதாக கூறப்படுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தனியார் பெட்ரோல் பங்க்கில் கலப்பட பெட்ரோல் விநியோகிப்பதாக கூறி வாடிக்கையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    தெங்கம்புதூர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் நேற்றிரவு பெட்ரோல் நிரப்பிய வாகனங்களில் வழக்கத்தை விட அதிகமாக புகை வெளியேறியதாக கூறப்படுகிறது.

    இதனால் சந்தேகமடைந்த வாடிக்கையாளர்கள், மற்றொரு பெட்ரோல் பங்க்கில் இருந்து வாங்கிய பெட்ரோலுடன் இந்த பெட்ரோல் பங்க்கில் வாங்கி பெட்ரோலை ஒப்பிட்டு பார்த்துள்ளனர்.

    அப்போது நிறத்தில் மாற்றம் இருக்கவே ஆத்திரமடைந்த அவர்கள், சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்க்கை முற்றுகையிட்டு பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    இது குறித்து சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவக்கப்பட்டு சம்பவ இடத்தில் கூடியிருந்தவர்களை போலீசார் கலைந்து போக செய்தனர்.

    பெட்ரோல் விற்பனை நிலையத்தில் லாரியில் இருந்து பெட்ரோல் இறக்கியபோது டேங்க் ல் ஏற்பட்ட கலங்கல் காரணமாக நிறம் மாறி இருந்ததாக பெட்ரோல் விற்பனை நிலைய பணியாளர்கள் தெரிவித்தனர்.

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: