Home /News /tamil-nadu /

விக்னேஷ் லாக் அப் மரணம்: சம்மந்தப்பட்ட போலீஸ்காரர்களை கைது செய்ய தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் பரிந்துரை

விக்னேஷ் லாக் அப் மரணம்: சம்மந்தப்பட்ட போலீஸ்காரர்களை கைது செய்ய தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் பரிந்துரை

விக்னேஷ்.

விக்னேஷ்.

Custodial Death | உயிரிழந்த விக்னேஷ் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

    விசாரணைக் கைதி விக்னேஷ் லாக் அப் மரணத்தில் சம்மந்தப்பட்ட போலீஸ்காரர்களை கைது செய்ய தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

    சென்னை கீழ்ப்பாக்கம் கெல்லீஸ் பகுதியில் பட்டாக்கத்தி மற்றும் கஞ்சா வைத்திருந்ததாக கடந்த மாதம் 18 ஆம் தேதி கைது செய்யப்பட்ட பட்டினப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷிடம் தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், 19ஆம் தேதி அவர் உயிரிழந்தார்.

    வலிப்பு வந்து விக்னேஷ் உயிரிழந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் தாக்கியதன் காரணமாகவே விக்னேஷ் உயிரிழந்ததாக குடும்பத்தார் தரப்பில் குற்றம்சாட்டினர். மேலும், விக்னேஷை காவல்துறையினர் துரத்திச் சென்று தாக்கும் சி.சி.டி.வி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    அதனைத் தொடர்ந்து, உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள், காவலர் பவுன்ராஜ், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த தீபக் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கு விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    இதற்கிடையில் சந்தேக மரணம் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை உயிரிழந்த விக்னேஷின் குடும்பத்தினர் முன்வைத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த இறப்பை மறைக்க மறைமுகமாக காவலர்கள் 1 லட்சம் ரூபாய் கொடுத்ததாக காவல் நிலையத்தில் உயிரிழந்த விக்னேஷின் சகோதரர் தெரிவித்த தகவல், காவல்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 8 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஆட்சியர் மற்றும் சென்னை காவல் ஆணையருக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

    இதையும் படிங்க: பாப்புலர் ஃபரண்ட் ஆப் இந்தியா மிகவும் ஆபத்தான அமைப்பு: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

    இதனிடையே, விசாரணைக் கைதி விக்னேஷ் மரணம் தொடர்பான உடற்கூராய்வு முடிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அந்த உடற்கூறு ஆய்வு அறிக்கையில், விக்னேஷ் உடலில் 13 இடங்களில் காயங்கள் இருந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், விக்னேஷ் லாக் அப் மரணத்தில் சம்மந்தப்பட்ட போலீஸ்காரர்களை கைது செய்ய தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

    மேலும், சாட்சியாக இருந்த ஆட்டோ ஓட்டுநருக்கு பாதுகாப்பு வழங்கவும், சுரேஷுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், உயிரிழந்த விக்னேஷ் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Lockup death

    அடுத்த செய்தி