• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஷாக்! இந்த மாத கரண்ட் பில் மூன்று மடங்கு அதிகரிப்பு - பொதுமக்கள் புலம்பல்

ஷாக்! இந்த மாத கரண்ட் பில் மூன்று மடங்கு அதிகரிப்பு - பொதுமக்கள் புலம்பல்

கோப்புக் காட்சி

கோப்புக் காட்சி

ஜூலை மாதத்திற்கான மின் கட்டணம்  இரண்டு, மூன்று மடங்கு அதிகமாக வந்திருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.  நான்கு மாதங்களுக்கு சேர்த்து கணக்கீடு செய்துள்ளதால் இவ்வாறு அதிக கட்டணம் வந்துள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

  • Share this:
ஜூலை மாதத்திற்கான மின் கட்டணம்  இரண்டு, மூன்று மடங்கு அதிகமாக வந்துள்ளதாக பொதுமக்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கொரோனா 2ம் அலை காரணமாக  தமிழகத்தில் கடந்த மே 10ம் தேதி முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன் பின்னர் பல்வேறு தளர்வுகளுடன் தற்போதுவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. கடந்த மே மாதத்தில் தொற்று உச்சத்தில் இருந்ததால் வீடுகளுக்கு சென்று மின் ஊழியர்கள் மீன் கட்டணத்தை கணக்கீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் 2019-ம் ஆண்டு மே மாதம் செலுத்திய மின் கட்டண தொகையையே அத்தகைய நுகர்வோர் செலுத்தலாம் என மின்வாரியம் அறிவித்தது. புதிய  நுகர்வோர் மார்ச் மாத கட்டணத்தை செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஜூலை மாதத்தில்  மின்கட்டண பதிவு கணக்கீடு மீண்டும் மேற்கொள்ளப்படும் என மின்சாரத்துறை அறிவித்தது. அதாவது, ஏப்ரல், மே, ஜூன், ஜூலை ஆகிய 4 மாதங்களுக்கான மின் கட்டணம் கணக்கிடப்பட்டு  2 ஆக பங்கிட்டு இலவச மின்சார அளவு கழிக்கப்படும் என்றும் இலவச மின்சாரம் உள்ளிட்டவற்றை கழித்துவிட்டு மின்கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க: தெற்காசியப் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தும் வசதியின்றி தவிக்கும் தமிழக வீரர்கள்!


இந்நிலையில், ஜூலை மாதத்திற்கான மின் கட்டணம்  இரண்டு, மூன்று மடங்கு அதிகமாக வந்திருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.  நான்கு மாதங்களுக்கு சேர்த்து கணக்கீடு செய்துள்ளதால் இவ்வாறு அதிக கட்டணம் வந்துள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.  இது தொடர்பாக நுகர்வோர் ஒருவர் கூறுகையில், மின்சார ரீடிங் கடந்த மே மாதம் மேற்கொள்ள படாததால், 2019 மே மாத கட்டணப்படி 1090 ரூபாய் கட்ட மெசேஜ் வந்தது. அதன் படி கட்டினேன். இந்த மாதம் ரீடிங் எடுக்கப்பட்டு 1500 யூனிட் என்று கணக்கிட்டு 6000 ரூபாய்க்கு மேல் கட்டச் சொல்லி வந்துள்ளது' என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பைக்கில் கண்ணாடிகளை அகற்றினால் வாரண்டி கிடையாது என எச்சரிக்க வேண்டும் - உயர் நீதிமன்றம்


இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் பயன்பாடு கணக்கிடுவதற்கு  பதிலாக மாதாமாதம் கணக்கிடப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. அவ்வாறு மாதாமாதமாக கணக்கிட்டிருந்தால் இவ்வாறு அதிக கட்டணம் வந்திருக்காது என்றும் ஒருசிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Murugesh M
First published: