Tasmac: தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள்: கொரோனா குறைந்த மாவட்டங்களில் டாஸ்மாக் திறப்பு?

மாதிரிப் படம்

ஊரடங்கு தளர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு தினங்களில் தமிழக அரசின் சார்பில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • Share this:
    தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மேலும் ஒரு வார காலம் நீட்டிப்பு செய்ய உயர் அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர். மேலும் கொரோனா குறைந்த மாவட்டங்களில் டாஸ்மாக் திறக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

    தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்தாலும், உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது தளர்வுகள் வழங்கலாமா என்பது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடைபெற்றது.

    சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனையில் தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    Also Read:   முதல்வர் ஸ்டாலினின் மோடி எதிர்ப்பு அரசியல்: அரசுக்கு என்ன மாதிரியான விளைவை ஏற்படுத்தும்?

    தமிழகம் முழுவதும் அதிகரித்து வந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ம் தேதி முதல் தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் பலர் ஊரடங்கில் தேவையின்றி சுற்றியதால் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வந்தது.. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் மே 24ம் தேதி முதல் தளர்வுகளின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ஜூன் 7ம் தேதி வரை நடைமுறையில் இருந்தது.

    பின்னர் பொதுமக்களின் நலன் கருதி ஜூன் 7ம் தேதிக்கு பின் பல்வேறு தளர்வுகள் தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.

    Also Read:    11 ஆண்டுகளுக்கு முன் மாயமான பெண்: தனது வீட்டருகே காதலன் வீட்டில் ரகசியமாக குடும்பம் நடத்தியது அம்பலம்!

    தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் அதே நேரத்தில் உயிரிழப்புகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் 36 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 17,321 ஆக குறைந்துள்ளது. இருப்பினும் தினசரி 400க்கும் அதிகமானோர் இறக்கின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்த நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாகவும், மேலும் கூடுதல்  தளர்வுகள் அளிக்கலாமா என்பது தொடர்பாகவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் காலம் நீட்டிப்பு செய்ய உயர் அதிகாரிகள் பரிந்துரை அளித்துள்ளனர். மேலும் 11 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகமாக இருப்பதால் அந்த மாவட்டங்களில் தளர்வு இல்லை. பிற மாவட்டங்களில் அதிகாலை நடைபயிற்சி, டாஸ்மாக் கடைகள் திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு தினங்களில் தமிழக அரசின் சார்பில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Published by:Arun
    First published: