Home /News /tamil-nadu /

குவியும் ஆன்லைன் உணவு ஆர்டர்கள்: சிக்கலை விளக்கும் டெலிவரி ஊழியர்கள்..!

குவியும் ஆன்லைன் உணவு ஆர்டர்கள்: சிக்கலை விளக்கும் டெலிவரி ஊழியர்கள்..!

உணவு

உணவு

ஹோட்டல்களில் அதிக அளவில் ஆர்டர்கள் இருப்பதால் அவர்கள் தயார் செய்து ஊழியரிடம் கொண்டு வருவதற்கு குறைந்தது 20 நிமிடங்கள் ஆகிவிடுகிறது.

ஆன்லைன் உணவு ஆர்டர்கள் தற்போது அதிகளவில் வருவதால் குறிப்பிட்ட இரண்டு மணி நேரத்திற்குள் உணவை கொண்டு சேர்க்க முடியவில்லை. அதனால் பரவலாக உணவு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு காரணமாக ஸ்விகி, ஷொமட்டோ, உபர் ஈட்ஸ் மூலம் உணவு விநியோகம் செய்யும் கால நேரம் குறைக்கப்பட்டது. அதன்படி காலை 6. 45 மணி முதல் 9 மணி வரையும், பகல் 11 .45 முதல் 2 மணி வரையும், மாலை 5.45 முதல் 8.30 மணி வரையும் ஒதுக்கப்பட்டது.

ஆனால் தற்போது மக்கள் அதிக அளவில் வீட்டிலேயே இருப்பதால் உணவு ஆர்டர்கள் ஆன்லைன் மூலம் குவிந்து வருகின்றன. அதனால் கொடுக்கப்பட்டுள்ள இரண்டு மணிநேரத்திற்குள் ஏராளமான வாடிக்கையாளர்களுக்கு உணவு கொண்டு சேர்ப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

ஊரடங்கு உத்தரவுக்கு முன்பு இரண்டு மணிநேரத்தில் 10 ஆர்டர்களை கொண்டு சேர்க்க முடியும் என்றால் தற்போது நான்கு பேருக்கு மட்டுமே கொண்டு செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது என்கின்றனர். ஹோட்டல்களில் அதிக அளவில் ஆர்டர்கள் இருப்பதால் அவர்கள் தயார் செய்து ஊழியரிடம் கொண்டு வருவதற்கு குறைந்தது 20 நிமிடங்கள் ஆகிவிடுகிறது.

அதை எடுத்துக்கொண்டு டெலிவரி செய்வதற்கு 10 முதல் 15 நிமிடங்கள் ஆவதால் இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பலருக்கும் உணவு கிடைப்பதில்லை. எனவே இந்த கால நேரத்தை கூடுதலாக நீட்டித்து தர வேண்டும் என்பது ஊழியர்கள்  மட்டுமல்லாது வீட்டில் இருக்கும் மக்களின் விருப்பமாகவும் உள்ளது.

Also see...





இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Published by:Vaijayanthi S
First published:

Tags: CoronaVirus, Food, Online

அடுத்த செய்தி