டெல்டா மாவட்டங்களில் கூடுதல் பரப்பில் குறுவை நெல் சாகுபடி

நெற்பயிர்

அடுத்து வரும் சம்பா சாகுபடியும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

  • Share this:
டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டை விட கூடுதல் பரப்பில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கு உற்சாகத்தையும், வேளாண்மையில் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக காவிரி டெல்டா பாசனத்திற்கு வழக்கமான ஜுன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. விவசாயிகளும் உற்சாகத்தோடு குறுவை சாகுபடிப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்கிற அறிவிப்பு. இந்த ஆண்டு வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை  என உழவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

உரிய தேதியில் மேட்டூர் அணைத் திறப்பு, குறுவைத் தொகுப்பு திட்டம் உள்ளிட்ட காரணத்தால் கடந்த 10 ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் கூடுதல் பரப்பில் தற்போது குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் குறுவை நெல் சாகுபடியை விவசாயிகள் உற்சாகமாக மேற்கொள்ளும் வகையில் யூரியா, டி.ஏ.பி, பொட்டாஷ் உரங்கள், நுண்ணூட்டங்கள் துவக்கத்திலேயே முழு மானியத்தில் வழங்கப்பட்டன. இதையடுத்து திருச்சி மாவட்டத்தில் கடந்த ஆண்டு சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்த நிலையில் தற்போது சுமார் 15 ஆயிரம் ஏக்கராக அதிகரித்துள்ளது.

இதில் 80%க்கு மேல் லால்குடி வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்தாண்டு 3.15 லட்சம் ஏக்கர். தற்போது 3.65 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தில், கடந்தாண்டு 85,000 ஏக்கரிலிருந்து தற்போது 1.36 லட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணை


இதே போல் நாகை மாவட்டத்தில் 20, 477 ஏக்கரிலிருந்து 32, 800 ஏக்கராக அதிகரிப்பு. மயிலாடுதுறை மாவட்டத்தில் 93 ஆயிரம் ஏக்கரில் இருந்து 97, 828 ஏக்கராக அதிகரித்துள்ளது. இதே உற்சாகத்தில் சம்பா நெல் சாகுபடியும் கடந்த ஆண்டை விட கூடுதல் பரப்பில் செய்ய உள்ளோம் என்கிறார்கள் விவசாயிகள்.

Must Read : அங்கன்வாடி ஊழியர்கள் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி போட்டிருக்கவேண்டும் - தமிழக அரசு உத்தரவு

பூச்சி, நோய் தாக்குதல், இயற்கை பேரிடர் இழப்புகளால் பலரும் வேளாண்மையில் இருந்து வெளியேறுவதால், சாகுபடி பரப்பு மெல்ல குறைந்து வரும் நிலையில், நடப்பாண்டில் குறுவை நெல் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது. அடுத்து வரும் சம்பா சாகுபடியும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது விவசாயிகளுக்கு உற்சாகத்தையும் வேளாண்மையில் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளதற்கு ஏற்ப நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும். தேக்கமின்றி நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்.

Read More : பயிர்கடன் தள்ளுபடியில் ரூ.516 கோடி முறைகேடு - சட்டசபையில் ஆதாரத்துடன் குற்றம்சாட்டிய அமைச்சர் ஐ.பெரியசாமி

மிக முக்கியமாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ. 30 -40 விவசாயிகளிடம் கட்டாய வசூல் செய்யும் அவலத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே பெரும்பான்மை விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Published by:Suresh V
First published: