காதலியை கர்ப்பமாக்கிவிட்டு கம்பி நீட்ட முயன்ற ‘புரட்சிக் கலைஞர்’... போலீசாரின் சிறப்பு கவனிப்பால் திருமணம்...!

Youtube Video

 • News18
 • Last Updated :
 • Share this:
  காதலித்த பெண்ணை கர்ப்பமாக்கிட்டு திருமணத்திற்கு மறுத்த மன்மத இளைஞரை பொதுமக்கள் பிடித்து காதலியின் கழுத்தில் தாலி கட்ட வைத்துள்ளனர்.

  கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த பெண்ணாடம், கூடலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவரது மகள் வசந்த பிரியா. பெண்ணாடத்தில் உள்ள கவரிங் நகை கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

  வசந்தபிரியா வேலை செய்யும் கடையின் வாசலில் பூக்கடை நடத்திவருபவர் 24 வயதான புரட்சிக்கலைஞர். கடையில் பூ வாங்கும்போது புரட்சிக்கலைஞர் உடன் வசந்தபிரியாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

  இந்த பழக்கம் நட்பாகி, காதலாக மாறியுள்ளது. ஓராண்டாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். நாள்தோறும் காதல் ரசம் சொட்டும் வார்த்தைகளில் பேசிய புரட்சிக்கலைஞர் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பிரியாவை தனது ஆசைக்கு இணங்க வைத்துள்ளார்.

  இதில் கர்ப்பமான வசந்த பிரியா இதை தனது காதலனிடம் தெரிவித்துள்ளார். கர்ப்பத்தை கலைத்து விட சொன்ன புரட்சிகலைஞர் தனது காதலியுடனான தொடர்பையும் துண்டித்துள்ளார்

  மேலும் வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்ய ஏற்பாடுகளையும் செய்ய தொடங்கியுள்ளார். இதற்குமேல் காதலரிடம் கெஞ்சி பயனில்லை என நினைத்த பிரியா, புரட்சிக்கலைஞரின் பெற்றோரிடம் முறையிட்டுள்ளார்.

  ஆனால், அவர்களும் தட்டிக்கழித்ததால், நியாயம் கேட்டு, விருத்தாச்சலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார் பிரியா.

  வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கிய போலீசார் புரட்சிகலைஞர் பிரியைவை ஏமாற்றியதை உறுதி செய்தனர். பின்னர் பிரியா, புரட்சிக்கலைஞர் மற்றும் அவர்களது பெற்றோரை காவல்நிலையம் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

  பேச்சுவார்த்தையில் காதலியை கரம்பிடிக்க புரட்சிக்கலைஞர் ஒத்துக்கொண்டார். இதை அடுத்து காவல்நிலையம் அருகில் உள்ள கோயிலில் வைத்து தாலி கட்ட வைத்தனர்.
  Published by:Sankar
  First published: