ஆசைக்கு இணங்க சொல்லி தம்பியின் மனைவியை கொடூரமாக தாக்கும் மைத்துனர் - அதிரவைக்கும் காட்சிகள்

முருகனுடைய அண்ணன் சுப்பிரமணியன் என்பவர் காவேரி மீது ஆசை கொண்டு அடிகடி ஆபாச வார்த்தைகளை பேசி தொந்தரவு செய்துள்ளார்.

  • Share this:
கடலூர் மாவட்டத்தில் தனது ஆசைக்கு இணங்க சொல்லி தம்பியின் மனைவியை மைத்துனர் அடிக்கும் பரபரப்பு காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்து உள்ள நாவலூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் இவரது மனைவி 28 வயதான காவேரி. முருகனுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு பக்கவாதம் ஏற்பட்டதால் எந்த வேலைக்கும் செல்லமுடியாமல் வீட்டிலையே உள்ளார். அவரது மனைவி காவேரி வீட்டு வாசலிலையே கறிகோழி விற்பனை கடை வைத்து குடும்பத்தை நடத்திவருகின்றார்.

இந்நிலையில் முருகனுடைய அண்ணன் சுப்பிரமணியன் என்பவர் காவேரி மீது ஆசை கொண்டு அடிகடி ஆபாச வார்த்தைகளை பேசி தொந்தரவு செய்துள்ளார். மேலும் தனது ஆசைக்கு இணங்கினால் காவேரியின் கணவரின் மருத்துவ செலவுக்கு பணம் கொடுப்பதாக சொல்லியுள்ளார். சில மாதங்களுக்கு முன்பஉ காவேரி தனிமையில் இருக்கும் போது குடிபோதையில் சுப்பிரமணி தவறாக நடக்க முயன்றுள்ளார்.


இதனால் பிரச்சனை ஏற்படவே சுப்ரமணியன் மீது காவேரி விருதாச்சலத்தில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். ஆனால் நடவடிக்கை எடுக்காத போலீசார் சுப்பிரமணியனை அழைத்து கண்டித்து மட்டும் அனுப்பி உள்ளனர். இந்நிலையில் தான் தீபாவளி அன்று குடிபோதையில் மீண்டும் காவேரி வீட்டிற்கு சுப்பிரமணி வந்துள்ளார்.

அப்போது காவேரியை ஆசைக்கு இணங்க அழைத்த சுப்பிரமணி காவேரியை தொட்டு தகாத செயல்களில் ஈடுப்பட்டுள்ளார். அதற்கு காவேரி சுப்பிரமணியை தாக்கவே தனது தம்பியான காவேரியின் உடல்நலம் முடியாத கணவனை அடித்து துன்புறுத்தியுள்ளார். ஊர்மக்கள் கூடியதால் ஆத்திரமடைந்த சுப்பிரமணி காவேரியை தகாத வார்த்தைகள் கூறி சாலை போட்டு அடித்துள்ளார். நடந்த சம்பவம் தொடர்பாக காவேரி ஆவினங்குடி காவல்நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.நாடு முழுவதும் பரவும் கொரோனா குறித்த தற்போதைய விரிவான தகவல்கள்
First published: November 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading