Home /News /tamil-nadu /

விருத்தாசலம் அருகே இளம் பெண்ணை நாட்டுத் துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்கள்

விருத்தாசலம் அருகே இளம் பெண்ணை நாட்டுத் துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்கள்

துப்பாக்கிச் சூடு

துப்பாக்கிச் சூடு

விருத்தாசலம் அருகே இளம் பெண் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவத்தில் முன்பகை காரணமாக அல்லது முயல் வேட்டைக்கு சென்ற நபர்கள் துப்பாக்கியால் சுட்டனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருத்தாச்சலம் அருகே  மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில், உயிருக்கு ஆபத்தான நிலையில் 21 வயதுடைய பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த வலசை கிராமத்தை சேர்ந்தவர்கள் காசிப்பிள்ளை-சாந்தகுமாரி தம்பதியினர். இவர்களுக்கு கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில், தனது மூன்று குழந்தைகள் மற்றும் தாயாருடன்,  கிராமத்துக்கு வெளிப்புறம் உள்ள தனக்கு சொந்தமான வயல்வெளியில் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு சுமார் 11 மணி அளவில், தனது கணவர் காசி பிள்ளைக்கு, சாப்பாடு கொடுத்துவிட்டு,  வீட்டிற்கு வெளியே சாந்தகுமாரி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது பயங்கர சத்தத்துடன் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு, காசிப்பிள்ளை வீட்டை விட்டு வெளியே ஓடிவந்து பார்த்தபோது,  ரத்த வெள்ளத்தில், சாந்தகுமாரி மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டின் அருகே உள்ள காட்டுப்பகுதியில் இருந்து மர்ம நபர்கள்,  துப்பாக்கியால் சாந்தகுமாரியின் இடுப்பு பகுதியில் சுட்டு இருப்பதை அறிந்த காசிப்பிள்ளை, உடனடியாக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இதுகுறித்து மங்கலம்பேட்டை காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்தை உடனே பிறப்பிக்க வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ்

சாந்தகுமாரியை திட்டமிட்டு துப்பாக்கியால் சுட்டனரா?....இரவு நேர முயல் வேட்டைக்கு சென்ற நபர்கள் துப்பாக்கியால் சுட்டனரா? அல்லது முன்பகை காரணமாக சுடப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் மங்கலம்பேட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Published by:Murugesh M
First published:

Tags: Cuddalore, Gun shoot, Woman

அடுத்த செய்தி