ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

காணொலி காட்சி மூலம் புகார்களை பெறும் கடலூர் மாவட்ட எஸ்.பி ஶ்ரீஅபிநவ்

காணொலி காட்சி மூலம் புகார்களை பெறும் கடலூர் மாவட்ட எஸ்.பி ஶ்ரீஅபிநவ்

காணொலி காட்சி மூலம் புகாரை விசாரிக்கும் எஸ்பி

காணொலி காட்சி மூலம் புகாரை விசாரிக்கும் எஸ்பி

கடலூர் மாவட்ட எஸ்.பி, காணொலி காட்சி மூலம் புகார்களை தினம்தோறும் பொதுமக்களிடம் இருந்து பெற்று வருகிறார்

  • News18
  • 1 minute read
  • Last Updated :

கடலூர் மாவட்ட மக்கள் தங்கள் குறைகளை நேரடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தன்னிடம் புகார் கொடுக்கலாம் என மாவட்ட எஸ்.பி.யாக பதவியேற்ற பின்னர் ஶ்ரீஅபிநவ்  அறிவித்தார். அதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்ட மக்கள் நாள் தோறும் அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து புகார்களை மனுவாக கொடுத்து வந்தனர்.

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் புகார்களை பெற தடை விதிக்கப்பட்டது. பின்னர் தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு, புகார்களை கொடுக்க நாள் தோறும் 30-க்கும் மேற்பட்டோர் வருகை தருவதால் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் நோக்கில் அவர்களுடன் காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்த போலீஸ் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாள்ர் ஶ்ரீஅபிநவ் முடிவு செய்தார்.

அதன்படி அலுவலகத்தின் தரைத்தளத்தில் தனி அறை ஒதுக்கப்பட்டு, அங்கு புகார் கொடுக்க வரும் மக்கள் ஒவ்வொருவராக தங்களது குறைகளை காணொலி காட்சி மூலம் கூறினர். அதற்கு கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ், அனைத்து புகார் மனுக்கள் மீதும் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். நாள் ஒன்றுக்கு 30-க்கும் மேற்பட்டோரிடம் காணொலி காட்சி மூலம் ஸ்ரீஅபிநவ்விடம் புகார் மனுகளை விசாரணை நடத்தி பெற்று வருகிறார்.

மேலும், நாள்தோறும் வரும் புகார்கள் மீது உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். எஸ்.பி.யிடமே நேரடியாக புகார் கூறும் வசதிக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது.

Also See: சீனாவைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்..? உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Published by:Sankar
First published:

Tags: Cuddalore