கடலூரில் தினமும் பொதுமக்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கும் காவல் ஆய்வாளர்

முகக்கவசம் வாங்க வழியில்லாதவர்கள், முகத்தில் துணியைக் கட்டி வந்த நிலையில் அவர்களுக்கு தினமும் இலவசமாக முகக்கவசம் வழங்குகிறார் காவல் ஆய்வாளர் உதயகுமார்

கடலூரில் தினமும் பொதுமக்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கும் காவல் ஆய்வாளர்
காவல் ஆய்வாளர் உதய குமார்
  • News18
  • Last Updated: July 17, 2020, 3:13 PM IST
  • Share this:
கடலூர் மாவட்டத்தில் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில், ஏற்கனவே வெளியே வருபவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்திப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடலூர் மாவட்டம் முழுவதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஶ்ரீஅபிநவ் உத்தரவின் படி, வாகனத்தில் வருபவர்கள் முககவசம் அணிந்துள்ளனரா? என்று போலீசார் சோதனை நடத்துகின்றனர்.

அப்போது முக கவசம் அனியாமல் வருபர்களுக்கு காவல் துறையினர் 100 ரூபாய் முதல் 500 வரை அபராதம் விதித்து வருகின்றனர்


கடலூர் மாவட்டத்தில் இதுவரை 30  ஆயிரம் நபர்கள் மீது அபராதம் விதிக்கபட்டுள்ளது. இந்த நிலையில் கடலூர் டிஎஸ்பி சாந்தி உத்தரவின் படி கடலூர் புதுநகர் காவல் ஆய்வாளர் உதயகுமார் நாள் தோறும் கடலூர் நகரில் முக கவசம் அனியாதவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்.

வழக்கு அபராதம் விதிக்கப்பட்டு வந்த போதும் ஏராளமான பொதுமக்கள் குழந்தைகள், கர்பிணி பெண், முதியோர்கள் யாரும் முக்கவசம் அணியாமல் கைக்குட்டைகள் மற்றும் துணிகளை முகத்தில் கட்டி வெளியே வருகின்றனர். அவர்களை எச்சரித்து வந்த ஆய்வாளரிடம் ஒரு சிலர் முக்கவசம் வாங்க பணம் இல்லை என்றும் கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் இழந்துள்ளோம் நாங்கள் எப்படி 100 ரூபாய் அபராதம் கட்டமுடியும் என கூறிவந்துள்ளனர்.


படிக்க: போதை மருந்து கடத்தல்காரரை விடுவிக்க முதல்வர் தரப்பில் இருந்து அழுத்தம் - மாநிலத்தையே அதிர வைத்த பெண் காவல் அதிகாரி

படிக்க: பிளாஸ்மா தானம் அளிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு நேர்காணல்களில் முன்னுரிமை..
இதனை 5 நாட்களாக அபராதம் விதிக்கப்படும் போது கண்ட ஆய்வாளர் உதயகுமார், சாலைகளில் முகக்கவசம் அணியாமல் வெளியே வரும் பொதுமக்களுக்கு, முககவசத்தின் அவசியத்தை வலியுறுத்தியும், கைக்குட்டைகளை பயன்படுத்தக் கூடாது என எச்சரித்து, தனது சொந்த செலவில் நாள் ஒன்றுக்கு 300 நபர்களுக்கு முக்கவசத்தை வழங்கி வருகிறார்.

இதனால் ஆய்வாளர் உதயகுமாரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். எனினும், முகக்கவசத்தை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு வெளியே சுற்றுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.
First published: July 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading