• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தொழிலாளி கொலை வழக்கு: சரணடைந்த திமுக எம்.பி. ரமேஷுக்கு நீதிமன்ற காவல்

தொழிலாளி கொலை வழக்கு: சரணடைந்த திமுக எம்.பி. ரமேஷுக்கு நீதிமன்ற காவல்

ரமேஷ்

ரமேஷ்

வழக்கில் தொடர்புடைய நடராஜன், கந்தவேல், அல்லா பிச்சை, வினோத், சுந்தர் என்கிற சுந்தர் ராஜன் ஆகிய ஐந்து பேரை கடலூர் மாஜிஸ்திரேட் முன்பு  போலீசார் ஆஜர்படுத்தி அதையடுத்து விருத்தாசலம் சிறையில் அடைத்தனர். 

  • Share this:
    முந்திரி ஆலையில் வேலை செய்த தொழிலாளி மரணமடைந்தது தொடர்பாக பதியப்பட்டுள்ள கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள  திமுக எம்.பி. ரமேஷ் பண்ருட்டி நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார். அவரை மூன்று நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு நாளை (அக்டோபர் 13ம் தேதி )மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

    கடலூர் நாடாளுமன்ற தொகுதி  உறுப்பினரும்  திமுகவைச் சேர்ந்தவருமான ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஆலையில் வேலை செய்த கோவிந்தராஜ் என்ற ஊழியரை அடித்துக் கொன்றதாக எம்.பி. ரமேஷ் மீதும், மேலும் ஐவர் மீதும் கொலை வழக்கை பதிவு செய்துள்ளது சிபிசிஐடி போலீஸ்.

    இதையடுத்து  அக்டோபர் 9ம் தேதி  காலை இவ்வழக்கில் தொடர்புடைய நடராஜன், கந்தவேல், அல்லா பிச்சை, வினோத், சுந்தர் என்கிற சுந்தர் ராஜன் ஆகிய ஐந்து பேரை கடலூர் மாஜிஸ்திரேட் முன்பு  போலீசார் ஆஜர்படுத்தி அதையடுத்து விருத்தாசலம் சிறையில் அடைத்தனர்.  இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள எம்.பி. ரமேஷை கைது செய்ய சிபிசிஐடி போலீஸார் முயற்சிகள் மேற்கொண்டனர்.

    மேலும் படிக்க: காசு கொடுத்தால் சர்வே பண்றேன் - லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக சிக்கிய சர்வேயர்


    இந்நிலையில், பண்ருட்டி நடுவர் நிதிமன்ற நிதிபதி கற்பகம் முன்னிலையில் ரமேஷ் சரண் அடைந்தார்.  பொறுப்பு நீதிபதி கற்பகவள்ளி அவரை அக். 13 வரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார். இவரை போலீஸ் காவலில் எடுக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டு வருகின்றனர்.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: