Home /News /tamil-nadu /

பொங்கல் பரிசு வழங்கும் விழாவில் மறைந்த மனைவியை நினைத்து கண்ணீர் விட்ட அமைச்சர்

பொங்கல் பரிசு வழங்கும் விழாவில் மறைந்த மனைவியை நினைத்து கண்ணீர் விட்ட அமைச்சர்

அமைச்சர் கணேசன்

அமைச்சர் கணேசன்

அமைச்சர் கணேசனின் மனைவி பவானி கடந்த டிசம்பர் 9ம் தேதி  காலமானார்.   மனைவி இறந்தபின்னர்  முதல் முறையாக சொந்த கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர், மனைவி நினைவில் கண்கலங்கி அழுதார்.

    தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் திட்டக்குடி அடுத்துள்ள தனது சொந்த ஊரான கழுதூரில்  நடைபெற்ற பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அபோது, மறைந்த தனது மனைவியை நினைத்து அமைச்சர் அழுத நிகழ்வு அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது.

    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் அரிசி ரேஷன் கார்டுதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசித்து வரும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 20 பொருட்கள் மற்றும் முழு கரும்பு அடங்கிய இந்த தொகுப்பு இன்று முதல் வழங்கப்பட்டு வருகிறது.

    சென்னை தலைமை செயலகத்தில் இத்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். பிற மாவட்டங்களில் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்தனர். அதன்படி, கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள கழுதூர் கிராமத்தில் தமிழக அரசு அறிவித்துள்ள இலவச பொங்கல் தொகுப்பு பொது மக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சியினை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தொடங்கி வைத்தார்.



    இதில் 1117 பயனாளிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். தனது சொந்த ஊரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும் போது அமைச்சர்,  அண்மையில் இறந்துபோன தனது மனைவியை நினைத்து கண்கலங்கி அழுதார். இது அங்கிருந்த பொது மக்கள் அனைவரையும் கண் கலங்க வைத்தது.

    இதையும் படிங்க: கரும்பு கொள்முதலில் இடைத்தரகர்கள் ஆதிக்கம்: அதிரடி உத்தரவு பிறப்பித்த தமிழக அரசு


    அமைச்சர் கணேசனின் மனைவி பவானி கடந்த டிசம்பர் 9ம் தேதி  காலமானார்.   உடல் நலக்குறைவால் வீட்டில் சிகிச்சைபெற்று வந்த அவர், திடீரென வீட்டிலேயே மயங்கினார். மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மாரடைப்பால் அவர் உயிரிழந்தது தெரியவந்தது. மனைவி இறந்தபின்னர்  முதல் முறையாக சொந்த கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் படிக்க: மசாஜ் அறைகளில் கேமரா பொருத்துவது தனிநபர் உரிமைக்கு எதிரானது: நீதிமன்றம் கருத்து

    Published by:Murugesh M
    First published:

    Tags: Cuddalore, Pongal Gift

    அடுத்த செய்தி