ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

இலவச பட்டா கேட்டு தீக்குளிக்க முயற்சி.. தடுக்க வந்த பெண் ஆய்வாளர் மீது பெட்ரோலை ஊற்றியதால் பரபரப்பு

இலவச பட்டா கேட்டு தீக்குளிக்க முயற்சி.. தடுக்க வந்த பெண் ஆய்வாளர் மீது பெட்ரோலை ஊற்றியதால் பரபரப்பு

பெண் ஆய்வாளர்

பெண் ஆய்வாளர்

ஆய்வாளர் அண்ணகொடி தடுத்த போது போராடிய  ராஜா ஆத்திரத்தில் காவல் ஆய்வாளர் மீது பெட்ரோலை ஊற்றியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கடலூரில் இலவச பட்டா கேட்டு தீக்குளிக்க முயற்சித்த நபர், தடுக்கவந்த பெண் காவல் ஆய்வாளர் மீது பெட்ரோல் ஊற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சிக்கு உட்பட்ட 21வது வார்டு தர்மகுடிக்காட்டில் அருந்ததியின மக்கள் 90 குடும்பங்கள் பல ஆண்டு காலமாக அங்கு வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தங்களுக்கு இலவச பட்டா வழங்க வேண்டும் என கோரி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த போதிலும் பட்டா வழங்கப்படாமல் இருந்து வருகிறது.

இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த ராஜா என்ற நபர் இலவச பட்டா கோரி விருத்தாசலம் திட்டக்குடி மாநில நெடுஞ்சாலையில் தீக்குளிக்கும் போராட்டம் அறிவித்திருந்தார். அறிவித்தபடி இன்று தீக்குளிக்க போவதாக திட்டக்குடி காவல் ஆய்வாளர் அன்னக்கொடி யிடம் தகவல் கொடுத்துவிட்டு சாலையில் தீக்குளிக்க முயற்சி செய்தார்.

தகவலறிந்த திட்டக்குடி காவல் ஆய்வாளர் அன்னக்கொடி தீக்குளிக்க முயற்சி செய்த  ராஜாவை தடுக்க முயன்றுள்ளார். அப்போது கிட்ட வந்தால் உங்கள் மீதும்  பெட்ரோலை ஊற்றிவிடுவேன் என  ராஜா மிரட்டியதாக  கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து ஆய்வாளர் அண்ணகொடி தடுத்த போது போராடிய  ராஜா ஆத்திரத்தில் காவல் ஆய்வாளர் மீது பெட்ரோலை ஊற்றியுள்ளார்.

இதையும் படிங்க: உடலில் வாளால் வெட்டி நேர்த்திக்கடன்.. ரத்த பலி கொடுக்கும் விநோத பழக்கம்

இதில் ஆய்வாளர் முகத்தில் பெட்ரோல் பட்டுள்ளது. தற்போது திட்டக்குடி அரசு மருத்துவமனையில் ஆய்வாளர் அண்ணகொடி சிகிச்சைக்காக சேர்க்கப்படுள்ளார். பெட்ரோலை ஊற்றிய இளைஞர் ராஜ வை  போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே,  தன்னை சிறையில் அடைத்தாலும் பரவாயில்லை தங்கள் பகுதி மக்களுக்கு இலவச பட்டாவை அரசு வழங்க வேண்டும் என்று ராஜா தெரிவித்தார்.

First published:

Tags: Cuddalore, Petrol, Police