கடலூர் மக்களவைத் தொகுதி முதலாம் மக்களவைத் தேர்தல் நடைபெற்ற 1952-ம் ஆண்டு முதலே தொடங்கப்பட்டு சில சீரமைப்புகளுடன் இன்றும் தொடர்கிறது.
8 முறை இங்கு வெற்றியைக் கைப்பற்றி காங்கிரஸ் கட்சி கடலூரை தங்கள் வசம் வைத்திருந்தது. கடந்த மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க-வைச் சேர்ந்த அ. அருண்மொழித்தேவன் 4,81,429 வாக்குகள் பெற்று காங்கிரஸ் கோட்டையாக இருந்த கடலூரையும் அ.தி.மு.க-வின் கோட்டையாக மாற்றினார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க-வின் நந்தகோபாலகிருஷ்ணன் 2,78,30 வாக்குகளையும், தே.மு.தி.க-வின் ஜெயசங்கர் 1,47,606 வாக்குகளையும் பெற்று தோல்வியைத் தழுவினர்.
2009-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸைச் சேர்ந்த கே.எஸ். அழகிரி 3,20,473 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றிருந்த நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெறும் 26,650 வாக்குகள் பெற்று டிபாசிட்டை இழந்தார்.
2009-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கடலூர் தொகுதியில் 76.06% வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், 2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 2 சதவீதம் கூடுதலாக உயர்ந்து 78.69% வாக்குப்பதிவு பெற்றது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cuddalore S22p26, Elections 2019, Lok Sabha Election 2019, North Central Tamil Nadu Lok Sabha Elections 2019, Tamil Nadu Lok Sabha Elections 2019