நெய்வேலி முந்திரி வியாபாரி உயிரிழந்த விவகாரம்: உடலை மறு பிரேதப் பரிசோதனை செய்வது குறித்து மாஜிஸ்திரேட் முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர்நீதிமன்றம்.

நெய்வேலி முந்திரி வியாபாரி செல்வமுருகன் உடலை மறு பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டுமென்ற மனைவி பிரேமாவின் கோரிக்கை குறித்து விருதாச்சலம் மாஜிஸ்திரேட் முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 • Share this:
  நகை பறிப்பு வழக்கில் கைதான நெய்வேலி முந்திரி வியாபாரி செல்வமுருகன், விருதாச்சலம் சிறையில் நீதிமன்ற காவலில் இருந்தபோது மரணமடைந்த விவகாரத்தில், நெய்வேலி ஆய்வாளர் ஆறுமுகம் உள்ளிட்ட மூன்று காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதியக்கோரியும், கணவர் உடலை ஜிப்மர் மருத்துவர்களை கொண்டு மறு பிரேதபரிசோதனை செய்ய கோரியும் செல்வமுருகனின் மனைவி பிரேமா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

  இந்த வழக்கு நீதிபதி ரவீந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் பிரேமா தரப்பில் கணவரை விசாரணைக்கு அழைத்து சென்றதிலிருந்தே பல விதிமீறல்கள் நடந்துள்ளதாகவும், உடலில் 7 காயங்கள் இருந்ததாகவும், உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் வாதிடப்பட்டது. தன்னுடைய ஒப்புதலோ கையெழுத்தோ இல்லாமல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், தன்னை மாஜிஸ்திரேட் விசாரிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டது.

  அப்போது மக்கள் கண்காணிப்பகம் அமைப்பு சார்பில் உண்மை கண்டறியும் குழு அமைத்து விசாரித்ததாகவும், செல்வமுருகன் உடலுக்கு மீண்டும் பிரேதப் பரிசோதனை கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதால், இந்த வழக்கில் தங்களையும் அனுமதிக்க கோரி முறையீடு செய்யப்பட்டது.

  அரசு தரப்பில் சிபிசிஐடியின் அறிக்கையை நீதிமன்றத்திற்கு மட்டும் தாக்கல் செய்ய தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனை விதிமுறைகளுக்குட்பட்டு தான் செய்யபட்டுள்ளதால், மீண்டும் செய்ய அவசியம் இல்லை எனவும், மாஜிஸ்திரேட் விசாரிக்கவில்லை என கூறுவது தவறு என தெரிவிக்கப்பட்டது.

  மேலும் படிக்க..சொத்துக்குவிப்பு வழக்கில் 10 கோடி ரூபாய் அபராதத் தொகையை இன்று செலுத்துகிறார் சசிகலா..  அப்போது நீதிபதி குறுக்கிட்டு பிரேமாவின் கோரிக்கையை விருதாச்சலம் மாஜிஸ்திரேட் பரிசீலித்து முடிவெடுக்கலாமே என தெரிவித்தார். அதற்கு அவசியம் இல்லை என தெரிவித்த அரசு தரப்பு வழக்கறிஞர், மாஜிஸ்திரேட் விசாரணை மற்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கைகளை நாளையே தாக்கல் செய்ய உத்தரவிட்டு, அதை ஆராய்ந்து சென்னை உயர் நீதிமன்றமே முடிவெடுக்கலாம் என விளக்கம் அளித்தார்.

  ஆனால் அதனை ஏற்க மறுத்த நீதிபதி, மறுபிரேதப் பரிசோதனை குறித்த பிரேமாவின் கோரிக்கையை விருதாச்சலம் மாஜிஸ்திரேட் பரிசீலித்து முடிவெடுக்க உத்தரவிட்டு, பிரேமாவின் வழக்கை முடித்துவைத்தார்.
  Published by:Vaijayanthi S
  First published: