ஜெயலட்சுமிக்கு பதில் விஜயலட்சுமி... சான்றிதழை மாற்றிக் கொடுத்ததாக வேட்பாளர் தர்ணா...!

News18

 • News18
 • Last Updated :
 • Share this:
  கடலூர் மாவட்டம் குமளங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜெயலட்சுமி, வெற்றி பெற்ற நிலையில், வெற்றிச் சான்றிதழில் தோல்வியடைந்தவரின் பெயரை அதிகாரிகள் எழுதிக் கொடுத்துள்ளனர்.

  கடலூர் மாவட்டம் குமளங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜெயலட்சுமி என்பவருக்கு தேர்தல் ஆனையம் ஆட்டோ சின்னம் ஓதுக்கீடு செய்தது.

  இவரை எதிர்தது போட்டியிட்ட விஜியலட்சுமி என்ற வேட்பாளர் பூட்டு-சாவி சின்னத்தில் போட்டியிட்டார்.

  நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்த நிலையில், ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்ட ஜெயலட்சுமி 2860 வாக்குகள் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

  இந்த நிலையில், இன்று தேர்தல் அதிகாரி வெற்றிச் சான்றிதழை கொடுக்கம் போது ஜெயலட்சுமிக்கு பதில் விஜய லட்சுமி என பெயரை மாற்றி போட்டு கொடுத்தால், விஜயலட்சுமி அதனைப் பெற்றுக் கொண்டு சென்றுவிட்டார்.

  தற்போது வெற்றி பெற்ற ஆட்டோ சின்னதின் வேட்பாளர் ஜெயலட்சுமி, கடலூர் பெரியார் கலைக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார்.
  Published by:Sankar
  First published: