• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • போலீசாரை விபத்தில் சிக்க வைக்க முயன்றோம்..! கடலூர் அருகே பிடிபட்ட கள்ளச்சாராய வியாபாரி பரபரப்பு வாக்குமூலம்

போலீசாரை விபத்தில் சிக்க வைக்க முயன்றோம்..! கடலூர் அருகே பிடிபட்ட கள்ளச்சாராய வியாபாரி பரபரப்பு வாக்குமூலம்

  • News18
  • Last Updated :
  • Share this:
கடலூரில் பிரபல கள்ளச்சாராய விற்பனையாளரை பல கிலோமீட்டர் துரத்திச் சென்று போலீசார் மடக்கிப்பிடித்துள்ளனர். 

கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தி தலைமையில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் நேற்று இரவு கடலூர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 3 இருசக்கர வாகனங்களை போலீசார் வழிமறித்தனர்.

போலீசாரை கண்டதும் இருசக்கர வாகணத்தில் வந்தவர்கள் நிற்காமல் அங்கிருந்து வேகமாக ஓட்டிச் சென்றனர். இதையடுத்து போலீசார் அந்த இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை பல கிலோமீட்டர் அதிக வேகத்தில் துரத்தி சென்றனர்.

திருமானிக்குழி அருகே சென்றபோது ஒரு இருசக்கர வாகனத்தை போலீசார் மடக்கி பிடித்தனர். மற்றவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்டவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், திருமாணிகுழி பகுதியை சேர்நத விலாங்கு என்கிற நடராஜன் வயது 32 என்பதும் புதுச்சேரி மாநிலம் குருவிநத்தம் என இடத்திலிருந்து சாராயத்தை திருமாணிகுழி கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விலாங்கு (எ) நடராஜனை கைது செய்தனர். மேலும் நான்கு மூட்டைகளில் இருந்து 120 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
பின்னர் காவல் நிலையம் அழைத்துவந்து விசாரணை நடத்தியதில் ”போலீசாரிடம் பிடிபடக்கூடாது என்பதற்ககாக வேகமாக சென்றோம், போலிசாரும் அதிவேகத்தில் பிடிக்க முயன்றபோது போலீசாரை விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிக்க முயன்றோம். ஆனால் சிக்கிவிட்டேன்” என வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankar
First published: