சிதம்பரம் அருகே காதலித்தபோது எடுத்த போட்டோ வைத்து இளம்பெண்ணை மிரட்டி வந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
சிதம்பரத்தை அடுத்த பரங்கிப்பேட்டை அருகே உள்ள முடசல்ஓடை கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி சத்தியா(21). திருமணத்துக்கு முன்பு அதேபகுதியை சேர்ந்த மற்றொரு மணிகண்டன் என்பவரை சத்தியா காதலித்து வந்ததாக தெரிகிறது. அப்போது மணிகண்டன் புகைப்படங்கள் எடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திருமணத்துக்கு பின் முன்னாள் காதலனான மணிகண்டன் சத்தியாவுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
தன்னுடன் வருமாறு தொடர்ந்து நிர்பந்தித்து வந்துள்ளார். இதற்கு அந்தப்பெண் மறுப்பு தெரிவிக்கவே காதலிக்கும் போது நாம் இருவரும் எடுத்துக்கொண்ட போட்டோ என்னிடம் உள்ளது. நீ என்னுடன் வரவேண்டும் இல்லையென்றால் அந்த போட்டோக்களை எல்லாம் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார்.
இளைஞர் மிரட்டல் விடுக்கும் விவகாரம் குறித்து தன் குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து குடும்பத்தினரின் அறிவுறுத்தலின் பேரில் இச்சம்பவம் குறித்து சத்தியா கிள்ளை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் மணிகண்டன் மீது தகவல் தொழில் நுட்ப சட்டப் பிரிவு, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.