Home /News /tamil-nadu /

5 லட்சம் கடனுக்கு 17 லட்சம் வட்டி - கந்துவட்டி கொடுமையால் நிதிநிறுவன மேலாளர் தற்கொலை

5 லட்சம் கடனுக்கு 17 லட்சம் வட்டி - கந்துவட்டி கொடுமையால் நிதிநிறுவன மேலாளர் தற்கொலை

தற்கொலை செய்துக்கொண்ட நிதி நிறுவன மேலாளர்

தற்கொலை செய்துக்கொண்ட நிதி நிறுவன மேலாளர்

Chidambaram Suicide: சிதம்பரத்தில் 5 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதற்கு 17 லட்சம் வரை வட்டி கொடுத்தும் கடன் அடையவில்லை மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்ட தனியார் நிதி நிறுவன மேலாளர்

சிதம்பரத்தில் கந்துவட்டி காரணமாக தனியார் நிதி நிறுவன மேலாளர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிதம்பரம் அருகே ஆதிவராகநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் இளஞ்சூரியன் (வயது 30). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் சிதம்பரத்தில் பழமண்டி நடத்தி வரும் ஒருவரிடம் 5 லட்ச ரூபாய் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. அதற்கு வட்டி தொகையாக இதுவரையில் 17 லட்சம் ரூபாய் கார், மனைவியின் தாலி செயின் வரை கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் 23 லட்சம் தரவேண்டுமென கந்துவட்டி கும்பல் கொடுமைப்படுத்தியதால் மன உளைச்சலில் இருந்த இளஞ்சூரியன் கடந்த 2ஆம் தேதி சிதம்பரம் தாலுகா காவல் நிலைய எல்லைப்பகுதியில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

Also Read: மிஸ் தமிழ்நாடு அழகியுடன் லிவிங் டூ கெதர்.. யூத் வேடத்தில் ஏமாற்றிய 56வயது போலீஸ்காரர்

இந்நிலையில் தகவல் அறிந்த உறவினர்கள் சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர பிரிவில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறந்துபோன இளஞ்சூரியனுக்கு அனிதா என்ற மனைவியும், 4 வயதில் கிருத்திஸ்  என்ற ஒரு மகனும் உள்ளனர். அவரது மனைவி தற்போது இரண்டாவது முறையாக கருவுற்று இருக்கும் நிலையில் கந்துவட்டி கொடுமை தாங்காமல் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

Also Read: இரவு சாப்பாட்டில் ’தூக்க மருந்து’ கலந்து கொடுத்த மனைவி.. 7 வருடமாக ‘டயர்ட்’ ஆன காரணத்தை கேமரா வைத்து கண்டுபிடித்த கணவர்..

இறந்துபோன இளஞ்சூரியன் உடலை உடற்கூறு ஆய்வுக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் போலீசார் வைத்துள்ள நிலையில் அவரது மனைவி சிதம்பரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அவரது மனைவி கூறுகையில் தனது கணவர் ஐந்து லட்ச ரூபாய் கடன் பெற்றதாகவும் அதற்கு வீட்டுமனை மற்றும் கார் அவரது தாலி செயின் முதல் கொண்டு அடமானம் வைத்து கொடுத்ததாக கூறப்பட்டுள்ளது.

மேலும் பணம் கேட்டு கந்துவட்டி கும்பல் தொந்தரவு கொடுத்ததால் மன உளைச்சல் அடைந்த இளஞ்சூரியன் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டதாகவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இறந்த போன இளஞ்சூரியன் மனைவி அனிதா மற்றும் அவரது தந்தை இளங்கோவன் கோரிக்கை வைத்துள்ளனர்.
Published by:Ramprasath H
First published:

Tags: Cheating, Cheating case, Commit suicide, Crime News, Interest

அடுத்த செய்தி