Home /News /tamil-nadu /

தென்பெண்ணை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 3 பேர் - இருவர் உடல்கள் மீட்பு

தென்பெண்ணை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 3 பேர் - இருவர் உடல்கள் மீட்பு

கடைசி செல்பி

கடைசி செல்பி

கடலூரில் தென்பெண்ணை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவகள் கடைசியாக, மகிழ்ச்சியாக எடுத்துக்கொண்ட செல்பி சோகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. 

கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பத்தை அடுத்த முள்ளிகிராம்பட்டு கிராமத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தென்பெண்ணை ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட நிலையில் இருவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

வடகிழக்கு பருவ மழை இந்த ஆண்டு சராசரி அளவை விட அதிகமாக பெய்துள்ளது. கடந்த ஒரு வாரமாகப் பெய்த கனமழையின் காரணமாகத் தமிழகத்தின் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வருகின்றன. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

மழை காரணமாகக் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும் விழுப்புரம் பகுதியில் தெண்பெண்ணை ஆற்றில் தடுப்பனை உடைப்பால் நேற்று வெடி வைத்து தகர்ககப்பட்டது. இதனால் ஆற்றில் வெள்ளருக்கு ஏற்பபட்டு நீர் ஆர்பரித்து சென்றது இதனால் ஆற்றின் கரைப் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என கடலூர் மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதனால் ஆற்றங்கரையோர பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று கடலூர் மாவட்ட நிர்வாகங்கள் எச்சரிக்கை விடுத்தாலும், இளைஞர்கள், பொதுமக்கள் எனப் பலரும் ஆற்று பகுதிக்கு சென்று செல்பி எடுப்பது, குளிப்பது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இந்த எச்சரிகையை மீறி, கடலூர் நெல்லிக்குப்பம் அடுத்த முள்ளிகிராம்பட்டு கிராமத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மாதவன், மாளவிகா ஆகிய இரட்டையர்களும், மற்றும் அவர்களது சித்தப்பா மகன் லோகேஷ் என்ற 15 வயது சிறுவனும் ஆற்றில் குளிக்கச் சென்றனர். அப்போது அவர்கள் செல்ஃபி, வீடியோ எடுத்து விளையாடிக் கொண்டிருக்கும் போது வெள்ளப்பெருக்கு காரணமாக ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர்.

3 பேர் ஆற்றில் அடித்துச்செல்லப்படுவதைக் கண்ட அங்கிருந்தவர்கள் கிராம மக்களிடம் தகவல் தெரிவித்தனர். அதுபோன்று தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து அலறி அடித்துக் கொண்டு கிராம மக்களே தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் குவிந்தனர்.

இந்த சூழலில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட 3 பேரில் இருவரது உடலை முட்புதரில் சிக்கிக் கொண்டிருந்த நிலையில் மீட்டனர். மேலும் ஒருவரை தேடும் பணிநடந்து வருகிறது. இந்த சம்பவம் முள்ளிகிராம்பட்டு கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Must Read : தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று (நவம்பர் 15) மிக கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

இந்நிலையில், அவர்கள் கடைசியாக,  மகிழ்ச்சியாக எடுத்துக்கொண்ட செல்பி சோகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
Published by:Suresh V
First published:

Tags: Cuddalore, Flood, Rain water

அடுத்த செய்தி