• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Tomato : தக்காளி கிலோ ரூ.30, வெங்காயம் ரூ.25 - அசத்தும் வியாபாரி; போட்டி போடும் பொதுமக்கள்

Tomato : தக்காளி கிலோ ரூ.30, வெங்காயம் ரூ.25 - அசத்தும் வியாபாரி; போட்டி போடும் பொதுமக்கள்

தக்காளி

தக்காளி

நான் மக்களால்தான் வளர்ந்தேன். எனவே அவர்கள் தக்காளி, வெங்காயம் விலையேற்றதால் கஷ்டப்படும் நிலையில் லாபம் பார்ககாமல் விற்பனை செய்யவேண்டும் என்பதால் இவ்வாறு விற்பனை செய்து வருகிறேன் என்கிறார் வியாபாரி ராஜேஷ்,

  • Share this:
கடலூரில் ஒரு கிலோ தக்காளி 30 ரூபாய்க்கும் வெங்காயம் கிலோ 25 ரூபாய்க்கும் விற்கப்படுவதால் பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு வாங்கிச் செல்கின்றனர்.

கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை கிலோ 120 ரூபாய்க்கு மேல் விலை உச்சத்தை எட்டிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடலூரில் தக்காளி விலை நேற்று கிலோ 90 ரூபாய்க்கு விற்பனை ஆகி கொண்டிருந்த நிலையில் தற்போது கடலூர் செல்லங்குப்பம் பகுதியில் உள்ள  காய்கறி கடையில் தக்காளி கிலோ 30 ரூபாய்க்கு வெங்காயம் கிலோ 25 ரூபாய்க்கும் விற்கப்படுவதால் அந்த கடையில் பொதுமக்கள் தக்காளியையும் வெங்காயத்தையும் போட்டி போட்டுக்கொண்டு வாங்கிச் செல்கின்றனர்.

அந்த கடையில், ஒரு நபருக்கு ஒரு கிலோ தக்காளி மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.  இது குறித்து, கடையின் உரிமையாளர் ராஜேஷ் கூறுகையில், கர்நாடகா மாநிலம் போளூரில் இருந்து இன்று இன்றரை டன் தக்காளி மற்றும் 2 டன் வெங்காயம் இறக்குமதி செய்ததேன். நான் இறக்குமதி செய்த தொகை எனக்கும் கிடைத்தால் போதும் என்பதால் ஒரு கிலோ தக்காளி 30 ரூபாய் என அறிவித்தேன் மக்களும் ஆர்வமாக வந்து வாங்கி சென்றனர்.

பல இடங்களில் 1 கிலோ தக்காளி 80 ரூபாய் முதல் 150 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார்கள். அவர்கள் கொண்டு வரும் போக்குவரத்து செலவு மற்றும் லாபத்தினை வைத்து விற்பனை செய்து வருகிறார்கள். ஆனால், நான் மக்களால்தான் வளர்நதேன் எனவே அவர்கள் தக்காளி, வெங்காயம் விலையேற்றதால் கஷ்டம் நிலையில் லாபம் பார்ககாமல் விற்பனை செய்யவேண்டும் என்பதால் இவ்வாறு விற்பனை செய்து வருகிறேன்.

நாளை தக்காளி வரத்து இருக்குமா என தெரியவில்லை. வரத்து கிடைக்கும் போது இதே போல் மீண்டும் இதே விலைக்கு விற்பனை செய்வேன்” என்று கூறினார்.

Must Read : அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 700 கைததிகளை விடுதலை செய்ய அரசாணை

இதேபோல், திருப்பாதிரிபுலியூர் பகுதியில் உள்ள காய்கறிகடைகளில் தக்காளி கிலோ 60 ரூபாக்கு விற்பனை செய்யபடுகிறது. ஒரு சில காய்கறி கடைகளில் 70 முதல் 90 வரை விற்பனை செய்யபடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: