முகப்பு /செய்தி /தமிழ்நாடு / 'அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை, நெல்மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்' ... விவசாயிகள் சாலைமறியல்

'அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை, நெல்மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்' ... விவசாயிகள் சாலைமறியல்

விவசாயிகள் மறியல்

விவசாயிகள் மறியல்

TN Farmers | அதிகாரிகள் அலட்சியத்தால் ஒரு மாத காலமாக கொண்டுவரப்பட்ட நெல்லை கொள்முதல் செய்யாமல் கிடப்பில் போடப்பட்டதால் மழையில் நனைந்து வீணானது எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

  • 1-MIN READ
  • Last Updated :

கடலூர் - திட்டக்குடி அருகே நெல் கொள்முதல் நிலையத்தில், அதிகாரிகள் நெல்லை கொள்முதல் செய்யாமல் கிடப்பில் போடப்பட்டதால் 200 மூட்டைகள் மழையில் நனைந்து சேதமானதாக 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கொட்டாரம் நெல் கொள்முதல் நிலையம் அமைந்துள்ளது. இந்த கொள்முதல் நிலையத்தில் 300க்கும் மேற்ப்பட்ட விவசாயிகள் வைத்திருந்த நெல் முட்டைகள் கனமழையில் நனைந்து சேதம் அடைந்து முளைப்பு விட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் இதுவரை வந்து அதிகாரிகள் பார்வையிடவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் ஆவினங்குடி பேருந்து நிலையம் அருகே 100க்கும் மேற்ப்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த ஆவினங்குடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொள்முதல் நிலைய அதிகாரிகளை வரவழைத்து விவசாயிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உடனே நரி கொள் முதலை எடுப்பதாக அதிகாரிகள் உத்தரவாதம் கொடுத்து அதன் பேரில் விவசாயிகள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

இதனிடையே அதிகாரிகள் அலட்சியத்தால் ஒரு மாத காலமாக கொண்டுவரப்பட்ட நெல்லை கொள்முதல் செய்யாமல் கிடப்பில் போடப்பட்டதால் மழையில் நனைந்த வீணானது எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

இது குறித்து விவசாயிகள் தெரிவிக்கையில், ஆன்லைனில் பதிந்து ஒரு மாதம் ஆகின்றது. கனமழையால் பாதி நெல் முளைத்து விட்டது. நெல் மூட்டைகள் முழுவதும் தண்ணீராக உள்ளது. அதிகாரிகள் கவனக்குறைவாகவே உள்ளனர். விவசாயிகள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். தமிழக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

செய்தியாளர் : பிரேம் ஆனந்த்.டி

First published:

Tags: Cuddalore, Farmers