தமிழக சட்டபேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது மெரினா கடற்கரையில் இருந்து கண்ணகி சிலை அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக
திமுக,
அதிமுக உறுப்பினர்கள் காரசாரமாக விவாதித்துகொண்டனர்.
தமிழக சட்டப்பேரவையில் 2022-23ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகின்றது. இன்று பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், அதிமுக ஆட்சியில் மெரினா கடற்கரையில் இருந்த கண்ணகி சிலை காரணமில்லாமல் அகற்றப்பட்டதாக தெரிவித்தார்.
இதற்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். பின்னர் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன், கண்ணகி சிலையை உடைத்து தள்ளிய அதிமுக என உறுப்பினர் பேசியதாகவும் அதனை அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் எனவும் கூறினார்.
இதையும் படிங்க: தமிழக பட்ஜெட்டை பாராட்டிய முன்னாள் சபாநாயகர் தனபால்.. நன்றி சொன்ன முதல்வர் மு.க.ஸ்டாலின்
இதற்கு பதிலளித்த பேசிய பொதுபணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் எந்த ஒரு தனிப்பட்ட இயக்கத்தையோ , தனிப்பட்ட நபரையோ குறிப்பிட்டு பேசாமல் பொதுவான கருத்தையே முன்வைத்தார். எனவே அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டிய அவசியமில்லை என்றார்.
எனினும் அதிமுக ஆட்சியில் சிலை அகற்றப்பட்டதா இல்லையா என கேள்வி எழுப்பினார்.
மேலும் படிக்க: எங்களால் முடிந்த போது, உங்களால் ஏன் முடியவில்லை? சட்டப்பேரவையில் பிடிஆர், இபிஎஸ் காரசார விவாதம்
இதற்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். குறுக்கிட்டு பேசிய அவை முன்னவர் துரைமுருகன் கண்ணகி சிலை மாற்றப்பட்ட நேரத்தில் லாரி இடித்து விழுந்துவிட்டதாக செய்தித்தாள்களில் செய்தி வெளியாகியது , எனினும் அது அகற்றப்பட்டது உண்மை என விவாதத்தை முடித்து வைத்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.