முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ரசாயனம் கலந்த மீன் விற்பனை? மீன் வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை...

ரசாயனம் கலந்த மீன் விற்பனை? மீன் வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை...

உணவு பாதுகாப்புத் துறையினர் எச்சரிக்கை

உணவு பாதுகாப்புத் துறையினர் எச்சரிக்கை

Cuddalore District : மீன் விற்பனையாளர்கள் பிடிக்கப்படும் மீன்களை நேரடியாக விற்பனை செய்ய வேண்டுமே தவிர அதில் ரசாயனம் கலப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என உணவு பாதுகாப்புத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

  • 1-MIN READ
  • Last Updated :

நீண்ட கடற்பரப்பை கொண்ட கடலூரில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக மீன்பிடித் தொழில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மீன் கிடைக்காத காலங்களில் மீன் விற்பனை செய்யும் விதமாக பல்வேறு இடங்களிலும் மீன்களில் ரசாயனம் கலந்து விற்கப்படுவதாக தகவல் வந்ததை தொடர்ந்து கடலூர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் கடலூர் துறைமுகம் பகுதியில் அமைந்துள்ள மீன் மார்க்கெட்டில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது மார்க்கெட் பகுதியில் எந்த ஒரு ரசாயனம் கலந்த மீன் விற்பனைக்கு இல்லை என தெரிந்தவுடன் மார்க்கெட்டுக்கு அருகில் மீன் விற்பனை செய்யும் சில்லறை வியாபாரிகளிடம் இருந்து மீன்களை ஆய்வு செய்தனர்.

அப்போது அங்கு இருந்த மீன்கள் அழுகிய நிலையில் இருந்ததை கண்டு பிடித்த அதிகாரிகள் அதனை பெனாயில் ஊற்றி அழித்ததுடன் அந்த மீன் விற்பனையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

மீன் விற்பனையாளர்கள் பிடிக்கப்படும் மீன்களை நேரடியாக விற்பனை செய்ய வேண்டுமே தவிர அதில் ரசாயனம் கலப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என உணவு பாதுகாப்புத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர் : பிரேம் ஆனந்த் , கடலூர் 

First published:

Tags: Cuddalore