கடலூரில் சினிமா பட பாணியில் காதலன் முன்பு காதலியை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர்கள் காதலன் உட்பட 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் தலைமை தபால் நிலையம் பகுதியில் நேற்று நள்ளிரவு 21 வயது பெண்ணொருவர் பேருந்து நிறுத்தத்தில் தனியாக நின்று கொண்டிருந்தார். அப்போது காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) அரோக்கியராஜ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். பேருந்து நிறுத்ததில் தனியாக நின்று கொண்டிருந்த பெண்ணிடம் சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறிய தகவலை கேட்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.
Also Read: வீட்டு ஓனரை விரட்டி விரட்டி வெட்ட முயற்சி - சிசிடிவி காட்சியால் பரபரப்பு
கடலூர் கம்மியம்பேட்டை பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் இளம்பெண் தனது காதலனுடன் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மூன்று வாலிபர்கள் இருவரையும் ஒன்றாக செல்போனில் படம் பிடித்து மிரட்டியுள்ளனர். இளம்பெண்ணின் காதலனை இருவர் பிடித்துக்கொள்ள காதலன் கண் எதிரே அந்தப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அவர்களிடம் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு இங்கு நடந்ததை யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டி அனுப்பியதாக போலீஸாரிடம் அந்தப்பெண் கண்ணீர் மல்க கூறினார்.
இதனை தொடர்ந்து போலீசார் உடனடியாக கடலூர் அரசு மருத்துவமனைக்கு பெண்ணை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பெண்ணின் காதலனை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த மூன்று நபர் யார் என தெரியவில்லை என கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் சந்தேகப்படும் நபர்களை அழைத்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், 3 வாலிபர்களை போலீசார் பிடித்து வந்து காதலனிடம் காண்பித்தனர். அப்போது காதலியை பாலியல் வன்கொடுமை செய்த மூன்று நபர்கள் இவர்கள் என அடையாளம் காண்பித்தார். காதலனிடம் இருந்து பறித்த செல்போன் ஒரு நபரின் வீட்டில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் மூன்று நபர்கள் செல்போன் மற்றும் காதலன் செல்போனை போலீசார் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.
Also Read: சென்னை அசைவ உணவகத்தில் கெட்டுப்போன மீன்கள்.. ஏழை குழந்தைகளை சாப்பிட அழைத்துச் சென்றவர்களுக்கு ஷாக்..!!
போலீசாரின் விசாரணையில் கைது செய்யப்பட்ட நபர்கள் குப்பன்குளம் பகுதியை சேர்ந்த கிஷோர்(19), சதிஷ் (19), புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த மற்றொரு இளைஞர் என்பது தெரியவந்தது. அந்த மூன்று நபர்கள் ஏதேனும் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு உள்ளார்களா என்பதனையும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் பகுதியில் சினிமா பட பாணியில் காதலனை முன்னிலையில் வாலிபர் ஒருவர் காதலியை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கம்மியம்பேட்டை சுடுகாடு பகுதியில் ஏற்கனவே திருநங்கைகள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதி வழியாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் இரவு நேரங்களில் செல்ல முடியாத அவல நிலையில் இருந்து வந்தனர். மேலும் அவ்வப்போது போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு அவர்களை விரட்டி அடித்து எச்சரிக்கை செய்து அனுப்புவார்கள். ஆனால் தற்போது கம்மியம்பேட்டை பகுதியில் பெண் ஒருவரை பலவந்தமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும்பீதியை ஏற்படுத்தி உள்ளது. ஆகையால் போலீசார் இரவு நேரங்களில் இப்பகுதியில் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலங்களில் நடைபெறாமல் தடுப்பதற்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.