ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

டெல்லியில் உண்ணாவிரதம் இருக்காமல் டெல்டாவில் வந்து மக்களை ஏமாற்றுகிறார்- அண்ணாமலையை விமர்சிக்கும் கே.எஸ்.அழகிரி

டெல்லியில் உண்ணாவிரதம் இருக்காமல் டெல்டாவில் வந்து மக்களை ஏமாற்றுகிறார்- அண்ணாமலையை விமர்சிக்கும் கே.எஸ்.அழகிரி

கே.எஸ்.அழகிரி - அண்ணாமலை

கே.எஸ்.அழகிரி - அண்ணாமலை

அண்ணாமலை டெல்லியில் பிரதமர் மோடி வீடு முன்பும் சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர் வீடு முன்புதான் உண்ணாவிரதம் இருந்திருக்க வேண்டும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

தமிழகத்தில் விவசாயிகளுக்கான தனி வேளாண்மை பட்ஜெட் போடப்பட இருப்பதை தமிழக காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் நகர  தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியைச் சேர்ந்தவர்கள் தமிழ் மாநில காங்கிரசில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணையும் விழா  தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி முன்னிலையில் சிதம்பரத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தவர்களை வரவேற்று தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி பேசினார்.

Also Read:  வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் தமிழக நிதித்துறை அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன்

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி,” தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் பா.ஜ.க-வுடன் நெருக்கம் காட்டுவதை மாநில காங்கிரஸ் கட்சியில் இருப்பவர்கள் விரும்பவில்லை. வாசனை தனிப்பட்ட முறையில் குறை சொல்லி பேசவில்லை. தமிழக முதல்வர் ஸ்டாலின் 100 நாட்களில் நிறைய சாதனைகளை செய்து உள்ளார். மேகதூது அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். மேகதாது அணை கட்டினால் டெல்டா பகுதி சீரழியும்.

கே.எஸ்.அழகிரி

Also Read:  மிஸ்ட்கால் சகோதரன்.. திடீர் காதலன் - இளம்பெண் புகாரால் காதல் மன்னன் கம்பி எண்ணும் பரிதாபம்

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை டெல்டா பகுதியில் உண்ணாவிரதம் இருந்தார். அவர் உண்மையிலேயே உண்ணாவிரதம் இருக்க வேண்டுமென்றால் டெல்லியில் பிரதமர் மோடி வீடு முன்பும் சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர் வீடு முன்புதான் உண்ணாவிரதம் இருந்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு டெல்டா பகுதியில்  அண்ணாமலை உண்ணாவிரதமிருந்து விவசாயிகளை ஏமாற்றுகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் எனது தலைவர் பதவி சில நாட்களில் போகப் போகிறது என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார் இதைப்பற்றி நான் தான் கவலைப்பட வேண்டும் அறுபதாண்டு ஆட்சியில் ஏழை மக்களின் வறுமையை ஒழித்தது காங்கிரஸ் கட்சிதான். தமிழகத்தில் விவசாயிகளுக்கான தனி வேளாண்மை பட்ஜெட் போடப்பட இருப்பதை தமிழக காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. இது நல்ல முயற்சி இந்த வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் தமிழக வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஒரு விவசாயிதான். இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொண்ட தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Published by:Ramprasath H
First published:

Tags: Annamalai, BJP, Congress, Delta Farmers, Farmers, K.S.Alagiri, Politics, Tamilnadu