வெயில் தாக்கம்; ஒரு பாட்டில் நீரை முழுமையாக குடித்த நல்லபாம்பு!

நல்லபாம்பு

வெயில் தாக்கத்தால் மயங்கிய நிலையில் காணப்பட்ட நல்லபாம்பு ஒன்று ஒரு பாட்டில் நீரை முழுமையாக குடித்து தனது தாகத்தை தனித்துள்ளது.

  • Share this:
வெயில் தாக்கத்தால் மயங்கிய நிலையில் காணப்பட்ட நல்லபாம்பு ஒன்று ஒரு பாட்டில் நீரை முழுமையாக குடித்து தனது தாகத்தை தனித்துள்ளது.

கடலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் என்பது அதிக அளவில் காணப்படுவதால் விலங்குகள் நீர் இல்லாமல் பெரும் அவதிபட்டு வருகின்றன. இந்த நிலையில் கடலூர் அடுத்த சுத்து குளம் பகுதியில் மயங்கிய நிலையில் நீண்ட நேரம் நல்ல பாம்பு ஒன்று கிடந்துள்ளது.

இதனை அறிந்த அந்த பகுதி மக்கள் பாம்பு பிடிக்கும் வீரர் செல்லாவிற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கடலூர் பாம்பு பிடி வீரர் செல்லா, நல்ல பாம்பை பிடித்து பார்த்த போது பாம்பு நீரில்லாமல் மயங்கிய நிலையில் இருப்பதை அறிந்துள்ளார்.

பின்னர் பாம்பை பத்திரமாக மீட்டு தண்ணீர் இல்லாமல் மயங்கியுள்ளது எனக் கூறி, நல்ல பாம்பிற்கு தண்ணீர் கொடுத்துள்ளார். அப்போது, ஒரு பாட்டில் நீரை அந்த நல்ல பாம்பு முழுமையாக குடித்தது. இதையடுத்து பிடிப்பட்ட அந்த பாம்பை அவர் காப்புகாட்டில் பத்திரமாக விட்டுச் சென்றார்.

செய்தியாளர் - பிரேமானந்த்உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Esakki Raja
First published: