கடலூரில் ஓடும் பள்ளி வேனில் ஓட்டுநர் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார்.
கடலூர் நகரில் உள்ள தனியார் பள்ளிக்கு சொந்தமான பள்ளி வேன்கள் மூலம் பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளிக்கு குழந்தைகள் அழைத்து வரப்படுகின்றனர். இந்த நிலையில் இன்று காலை வழக்கம்போல் கடலூர் அருகே உள்ள நெல்லிக்குப்பம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வந்த வேன் ஒன்று ராமு தெருவில் வரும் பொழுது அந்த வேன் ஓட்டுநர் ராமு(43) திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார்.
அதனை தொடர்ந்து அந்த வேன் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள வீட்டு சுவற்றில் மோதி கவிழ்ந்தது. இந்த நிலையில் உடனடியாக அருகில் உள்ள மக்கள் வேனில் உள்ள குழந்தைகளை காப்பாற்றினர். 12 மாணவர்களும் சிறு காயமின்றி உயிர் தப்பிய நிலையில் ஓட்டுநர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
நெல்லிக்குப்பம் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்த நிலையில், ஓட்டிக் கொண்டிருக்கும் போதே ஓட்டுநருக்கு நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில் அவர் உயிரிழந்து விட்டதாகவும். அதன் பிறகு கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்ததாகவும் தெரியவந்தது. அதிர்ஷ்டவசமாக இதில் 12 மாணவர்களும் காயமின்றி உயிர் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.